நடிகர் திரவ் நடிப்பின் உருவாகி இருக்கும் 'வெப்பம் குளிர் மழை' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நட்சத்திர இயக்குநர் வெற்றிமாறன் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'வெப்பம் குளிர் மழை' படத்தில் திரவ், இஸ்மத் பானு, எம். எஸ். பாஸ்கர், ரமா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ப்ருத்வி ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷங்கர் ரங்கராஜன் இசையமைத்திருக்கிறார். குழந்தை பேறு தொடர்பான இந்தத் திரைப்படத்தை ஹேஷ்டேக் எப் டி எஃப் எஸ் புரொடக்ஷ்ன்ஸ் பட நிறுவனம் சார்பில் நடிகர் திரவ் தயாரித்திருக்கிறார்.
இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் நாயகன் கையில் பால் கறக்கும் பாத்திரத்துடனும், அவர் மற்றொரு கையில் பசுவையும் அழைத்துச் செல்கிறார். அந்த பசுவின் முகம் நாயகியின் முகமாகவும், பசுவின் வயிற்றில் பெண்ணின் சிசுவுடன் கூடிய கருப்பை தெரிவது போலும் வடிவமைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM