இந்திய கோடீஸ்வர வர்த்தகரான முகேஷ் அம்பானியின் வீட்டு விசேஷத்தில் உணவு சமைப்பதில் இலங்கையைச் சேர்ந்த 13 சமையல் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
முகேஷ் அம்பானி - நீடா அம்பானி தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சென்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி 19 ஆம் திகதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவருக்கும் வருகிற ஜூலை மாதம் 12 ஆம் திகதி திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் திருமணத்திற்கு முன்னரான வைபவ நிகழ்ச்சிகள் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் கடந்த முதலாம் திகதி ஆரம்பமாகி வரை 3 நாட்கள் நடந்தது.
இந்நிகழ்விற்கு கொழும்பில் உள்ள சிட்ரஸ் (Citrus) ஹோட்டல் குழுமத்தையும் “சிலோன் கரி கிளப்” (Ceylon Curry Club) உணவகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சமையல் கலைஞர்கள் சென்றிருந்தனர்.
இந்த 13 சமையல்காரர்களும் தங்களது உணவகங்களில் இலங்கை உணவுகளை சமீபத்திய முறைகளில் தயாரித்து வழங்கியுள்ளனர்.
மார்ச் 03ஆம் திகதி திருமண நிகழ்வில் கலந்துகொள்பவர்களுக்கு மதிய உணவு தயாரிக்கும் வாய்ப்பு இலங்கை சமையல் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டநிலையில், அவர்கள் தயாரித்த உணவுக்கான பாராட்டுக்களின் அடிப்படையில் கூடுதல் நாளாக கடந்த 4ஆம் திகதி நிகழ்விற்கான இரவு உணவைத் தயாரிக்கும் வாய்ப்பும் இலங்கைச் சமையல் கலைஞர்களுக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்த திருமண விழாவிற்கு இலங்கை சமையல் கலைஞர்கள் தவிர பிரித்தானியா, துபாய், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சமையல் கலைஞர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்திய கோடீஸ்வர வர்த்தகரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழாவிற்கு உணவு சமைப்பதில் பங்கேற்ற இலங்கையைச் சேர்ந்த 13 சமையல் கலைஞர்கள் வியாழக்கிழமை (07) நாடு திரும்பினர்.
இது குறித்து சிட்ரஸ் (Citrus) ஹோட்டல் குழுமம் மற்றும் ம் “சிலோன் கரி கிளப்” (Ceylon Curry Club) உணவகம் தங்களின் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சிட்ரஸில் இருந்து பதின்மூன்று நட்சத்திரங்கள் கொண்ட A-குழுவினர், குஜராத்தின் ஜாம் நகரில் எதிர்பாராத சாகசத்தை நிகழ்த்திவிட்டு இந்தியாவில் இருந்து கொழும்புக்குத் திரும்பியுள்ளனர்.
சம காலத்தில் மிகப் பெரிய திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களில் சமையல் துறைக்கு நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது எங்களின் முழுமையான பாக்கியமாக கருகிறோம்.
சிலோன் கறி கிளப், ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமண கொண்டாட்டத்தில் கலந்து கொண்டது பெரும் சாதனையாக அமைந்துள்ளது.
இதன்போது, இலங்கை ஃப்யூஷன் உணவு வகைகளில் இருந்து அவர்களுக்கு பிடித்தவற்றைத் தேர்ந்தெடுத்து சமைத்து பறிமாறப்பட்டது.
சிலோன் கரி கிளப்பின் ஊடாக முதலில் ஒரு மதிய உணவு சேவையை மாத்திரம் வழங்க திட்டமிடப்பட்ட போதும், எங்களின் உணவு வகைகள் மற்றும் சேவைக்கு கிடைத்த அமோகமான நேர்மறையான வரவேற்பின் காரணமாக, தொடர்ந்து இரண்டாவது நாளாக உணவுகளை பறிமாறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதில் நாங்கள் மிகவும் வியப்படைந்தோம்.
நமது இலங்கையின் கொடியை உயரத்தில் பறக்கவிட இந்தியாவில் அயராது உழைத்த குமுது மற்றும் செஃப் பாண்டு தலைமையிலான குழுவினருக்கு வாழ்த்துகள்” என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM