உலகளவில் பரந்து வாழும் இந்துக்கள் இன்று (08) சிவபெருமானை வணங்கி மகா சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.
மாசி மாதத்தில் அமாவாசைக்கு முன் வரும் சிவராத்திரி விரத நாளே மகா சிவராத்திரி ஆகும்.
ஜோதி வடிவான சிவனை நோக்கி இன்றைய தினம் விரதம் நோற்பவர்களும், சிவனை நினைத்து பூஜை, வழிபாடு செய்பவர்களும் ஆசை, சோம்பல், கோபம், குரோதம், வஞ்சகம் முதலான தீய குணங்கள் நீங்கி நன்மையும் மேலான குணங்களையும் பெறுவர் என்பதே சிவராத்திரி விரத பலனாகும்.
சிவராத்திரி விரதம் கடைபிடிப்போர் இன்று பகலில் உணவை தவிர்த்து, சிவன் பற்றிய பாடல்களை பாடுவது, திருவிளையாடல் கதைகளையும் கேட்பதும் சிவனை மனதாற துதிப்பதும் கோடான கோடி வரங்களை பெற்றதற்கு சமம் என கூறப்படுகிறது.
அத்தோடு, சிவராத்திரி தினத்தன்று இரவு முழுவதும் கண் விழித்து சிவ தரிசனம் செய்யலாம்.
சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து, 'சிவாயநம' என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சாடனம் செய்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும் என்பதும் இந்துக்களின் நம்பிக்கை.
ஒரு முறை பார்வதி சிவனிடம், "உங்களை வழிபாடு செய்ய மிகவும் உகந்த நாள் எது?" என்று கேட்டார்.
அதற்கு சிவன், "மாசி மாத தேய்பிறை 14ஆம் நாளான அமாவாசை நாளே எனக்கு மிகவும் உகந்த நாள். அன்று விரதமிருந்து வழிபாடு செய்பவர்கள் என் அருளை பூரணமாக பெறுவதற்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள்" என்று கூறினாராம்.
சிவனே மொழிந்த வாக்குக்கிணங்க, இன்று சிவராத்திரி விரதம் நோற்பவர்களும் சிவனை பூஜிப்பவர்களும் எல்லா நலன்களும் பெற வேண்டும்!
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM