பொலன்னறுவை வலேகடை பிரதேசத்தில் உள்ள தோட்டமொன்றில் புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்திய ஜனாதிபதி விருது பெற்ற இயந்திரம் மற்றும் நவீன கார் என்பனவற்றுடன் ஐவர் இன்று வெள்ளிக்கிழமை (08) கைது செய்யப்பட்டதாக பொலன்னறுவை குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் கடவத்தை பிரதேசத்தில் வசிப்பவர் எனவும், ஏனைய சந்தேக நபர்கள் பண்டாரவளை, கலேவெல, கந்தளாய், பிரிகம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் , 30 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது .
கைதானவர்களில் 46 வயதுடைய சந்தேக நபர் 1999ஆம் ஆண்டு புதையல் தோண்டுவதற்கான ஸ்கேனிங் இயந்திரத்தைக் கண்டுபிடித்து ஜனாதிபதி விருதைப் பெற்றவர் என்பதுடன் இதே இயந்திரத்தில் புதையல் தோண்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர் .
இந்த சந்தேகநபர்கள் சில வருடங்களுக்கு முன்னர் இந்த இடத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியைப் பெற்றுப் புதையல் தோண்டியுள்ளதாகவும் ஒரு வாரத்திற்கு முன்னர் இதே இடத்திற்குக் கிணறு வெட்டுவதாகக் கூறி புதையல் தோண்டுவதற்காக காரில் வந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது .
இவர்களிடமிருந்து புதையல் தோண்டப் பயன்படுத்தப்பட்ட இரும்பு கம்பிகள், தண்ணீர் மோட்டர்கள், கம்பிகள் , ஸ்கேனிங் இயந்திரம் போன்ற பல உபகரணங்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலன்னறுவை பிரதேச புலனாய்வு உப பொலிஸ் பரிசோதகர் தெரிவித்துள்ளார் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM