(எம்.மனோசித்ரா)
சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்பாடுகளில் எதிர்க்கட்சிகளையும் இணைத்துக் கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா பாராளுமன்றத்தில் முன்வைத்த கோரிக்கை வரவேற்கத்தக்கது. அதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை சகல எதிர்க்கட்சிகளுடனும் இது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வாழ்க்கையில் சவாலான காலங்களை ஊடகவியலாளர்கள் மற்றும் கேலிச்சித்திரக் கலைஞர்கள் எவ்வாறு நோக்கினார்கள் என்பதை வெளிப்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனவினால் தொகுக்கப்பட்ட “Press Vs. Prez” நூல் வியாழக்கிழமை (7) கொழும்பு தாமரை தடாக கலையரங்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்த ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில்,
2022ஆம் ஆண்டு எவ்வாறான நிலைமை காணப்பட்டது என்பதை இன்று பெரும்பாலானோர் மறந்து விட்டனர். அவற்றில் சிலவற்றை நானும் மறந்து விட்டேன். அன்று எனக்கு இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு கூட ஒரு இடம் காணப்படவில்லை. இறுதியில் பிரதம நீதியரசரிடம் அறிவித்து விட்டு விகாரையொன்றில் பதவிப்பிரமாணம் செய்தேன். அன்று பாராளுமன்றத்தையும் சிலர் சுற்றி வளைப்பதற்கு சதித்திட்டம் தீட்டினர். இராணுவத்தினரால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. இன்று அதனை மறந்து விட்டோம்.
பொருளாதாரம் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. அதற்கான நடவடிக்கைகளை எடுத்த போது ஜனநாயக விரோதமாக நான் செயற்படுவதாகக் கூறினர். தேர்தலைக் காலம் தாழ்த்தப் போவதாகவும், சர்வாதிகார ஆட்சி தலைதூக்கவுள்ளதாகவும் கூறினர். ஆனால் இந்தக் காலகட்டத்தில் என்னைப் பற்றி 2000க்கும் மேற்பட்ட கேலி சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. சர்வாதிகார ஆட்சி என்றால் இவற்றுக்கு எவ்வாறு இடமளிக்கப்பட்டிருக்கும்?
1931ஆம் ஆண்டு முதல் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டு வரும் நாடு இலங்கையாகும். தேர்தல் முடிவுகள் எதுவானாலும் அதனை ஏற்றுக் கொண்டு ஆட்சியை ஒப்படைக்கும் வரலாற்றைக் கொண்ட ஆசியாவின் ஒரேயொரு நாடு இலங்கை என்பதில் நான் பெருமை கொள்கின்றேன். எனவே வருட இறுதியில் ஜனாதிபதித் தேர்தலும், அதன் பின்னர் பாராளுமன்றத் தேர்தலும் இடம்பெறும் காலகட்டத்தில் மேற்குறிப்பிட்டதை விட அதிக கேலி சித்தரங்கள் என்னைப் பற்றி வரையப்படும் என்பதில் ஐயமில்லை.
புதன்கிழமை (6) ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா பாராளுமன்றத்தில் சிறந்த யோசனையொன்றை முன்வைத்தார். சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்பாடுகளில் எதிர்க்கட்சிகளையும் இணைத்துக் கொள்ளுமாறு கோரினார். இதனை நான் வரவேற்கின்றேன். எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்புடன் நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டை செயற்படுத்துவதற்கு முற்படுவோம் என எதிர்தரப்பிற்கு அழைப்பு விடுகின்றேன். எதிர்வரும் திங்களன்று இது தொடர்பில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் சகல எதிர்க்கட்சிகளும் பங்கேற்கும் என்று நம்புகின்றேன். நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதில் எதிர்க்கட்சிகளையும் இணைத்துக் கொண்டு பயணிப்பதை விரும்புகின்றேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM