கோப் குழுவின் தலைவராக ராேஹித்த அபேகுணவர்த்தன தெரிவு

Published By: Vishnu

08 Mar, 2024 | 01:06 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின்  (கோப்) தலைவராக பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பிளர் ரோஹித அபே குணவர்தன  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவராக ஏற்கனவே அரச தரப்பு எம்.பி. யான  பேராசிரியர் ரஞ்சித் பண்டார இருந்த நிலையில் அவர் கிரிக்கெட் சபை சர்ச்சை மற்றும் அவருக்கு எதிரான  பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டினால் குழுவின் நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன

இந்நிலையில் 5ஆவது பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்பட்டதால் குழு கலைக்கப்பட்டு தற்போது 5 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாயுள்ளநிலையில் குழுவுக்கான தலைவர்  தெரிவு நேற்று  வியாழக்கிழமை இடப்பெற்றது.

இதன்போது கோப்  குழுவின் தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் சுயாதீன எதிரணி  எம்.பி. யான முன்னாள் இறைவரித்திணைக்கள  பிரதி ஆணையாளர் காமினி வலேகொட  ஹேஷா விதானகே எம்.பி. யால்  முன்மொழியப்பட்டு டிலான் பெரேரா எம்.பி.யால்  வழிமொழியப்பட்ட நிலையில் அரச தரப்பில்  பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட எம்.பியான ரோஹித அபே குணவர்தன  மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி. யால் முன்மொழியப்பட்டு சஞ்சீவ எதிரிமான்ன எம்.பி.யால் வழிமொழியப்பட்டார்.

இதனையடுத்து தலைவர் தெரிவுக்காக இடம்பெற்ற வாக்களிப்பில்   ரோஹித அபே குணவர்தன  எம்.பி.  அதிக வாக்குளைப்பெற்று தலைவராக தெரிவானார்.

இதேவேளை பாராளுமன்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) புதிய தலைவராக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களால் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக பிள்ளையான் உறுதியளித்தார்...

2024-06-22 22:11:18
news-image

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

2024-06-22 22:22:37
news-image

அரசாங்கமும் எதிர்க்கட்சியிலுள்ள வேலையாற்றத் தெரியாத கட்சியும்...

2024-06-22 16:47:00
news-image

போதைப்பொருட்களுடன் 536 பேர் கைது

2024-06-22 22:12:51
news-image

இரண்டு முச்சக்கரவண்டிகள் மோதி விபத்து ;...

2024-06-22 22:21:27
news-image

தமிழ் அரசியல் தலைவர்களின் நிலைப்பாடுகளை இந்திய...

2024-06-22 16:58:15
news-image

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த கொழும்புவாசி கைது...

2024-06-22 18:26:32
news-image

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த வாழைத்தோட்டம்...

2024-06-22 16:49:56
news-image

நோயாளியின் மோதிரம், சிறுதொகைப் பணம், கைப்பை...

2024-06-22 18:49:06
news-image

திருகோணமலையை வந்தடைந்தது இந்திய கடற்படையின் கமோர்டா...

2024-06-22 22:24:50
news-image

காட்டு யானைகளின் அட்டகாசத்தால் பயிர்கள், உடைமைகளை...

2024-06-22 16:55:38
news-image

பதுளையில் மோட்டார் சைக்கிள் விபத்து ;...

2024-06-22 16:51:52