மங்கையர் தின விழிப்புகள் 

07 Mar, 2024 | 09:33 PM
image

பெண்ணாக பிறந்து பெரு உலகம் கண்டு நித்தம் பேரோடும் புகழோடும் புண்ணிய பூமியில் பூர்வீகமாய் புதுமைகள் பல படைத்து வாழ்வில் வசந்தம் கண்டு புன்னகைத் தெளிப்பில் மெல்லிய வார்த்தைகள் மனங்களைக் கவர மங்கையர் ஜனனம் பரிணாமம் பெற்றே சிறந்திட ஆயிரம் வழிகள் தேடலின் படிப்பில் தேர்வில் வென்றிடவே அனைத்துலக பெண்களும் ஆர்வமாய் களத்தினிலே. 

ஆக இதிலென்ன மங்கையர் தினமென்ற அதிசயம். ஆமாம் போராடித் தானே உரிமைகளைப் பெற வேண்டிய நிலையினிலே பயணமுமே. 

சம உரிமைக்காகவும், சகல துறை சார்ந்து பங்கேற்று கம்பீரமாக திகழ்ந்திடுவதற்காகவும் 1910ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டின் தலைநகரான கோபன் ஹேகனில் நடைபெற்ற சர்வதேச சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு மகளிர் தினம் கொண்டாடப்படுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. 

அனைத்துலக தேசிய இனங்களையும் சார்ந்த ஒரு தனிச் சிறப்புள்ள தினமாக மகளிர் தினத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். சமூக பிரச்சினைகள் பற்றிய சோஷலிசக் கண்ணோட்டத்துடன் பெண்கள் பிரச்சினை அனைத்துடனும் வாக்குரிமை கோரிக்கையை இணைத்து விவாதிக்க வேண்டுமென்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் சர்வதேச மகளிர் தினம் உருவாக காரணமாக அமைந்தது. 

எனவே, மாநாட்டுக்கு தலைமை வகித்து மகளிர் நாள் தீர்மானத்தை கம்யூனிஸ்ட் தலைவர் கிளாரக ஜெட்கின் முன்மொழிந்தார். எனவே, உணவு, அமைதி ஆகியவற்றுக்கான போராட்டம் பெப்ரவரி மாத இறுதி ஞாயிற்றுக்கிழமையில் 1917ஆம் ஆண்டு போராடினர். இது க்ரிகோரியன் நாள்காட்டியின் ஐரோப்பிய நாடுகளின் மார்ச் 08 என கணக்கிடப்பட்டு சர்வதேச மகளிர் தினமாக காலப்போக்கில் மாறிப்போனது. 

மகளிர் தினம் எனும்போது அழகான சொல்லில் அழகு மங்கையரை வரவேற்று அடுப்பூதியப் பெண்ணாலும் எல்லா வகையான ஆளுமைகளையும் ஆள முடியும். 

ஆனாலும், காலங்கள் கடுமையாகவும் கொடுமையாகவும் மனிதம் என்ற பண்பைத் தாண்டி இயல்பு நிலை குன்றிடாதவாறு தவமாக பிறந்த பயனைப் காத்திட வேண்டுமென்ற ரீதியில் செயற்படல் முக்கியமே என்பதை உணர்ந்திடல் அவசியமே எதற்காகவும் எந்த நிலையிலும் தன்னையும் தன் சார்ந்த பெண்களையும் விட்டுக் கொடுக்காது உயர்வான சிந்தனைகள் கிளை பரப்பிட சீரும் சிறப்புமாக வாழும் தகுதி தராதரங்களை ஏற்படுத்தி சுமையில்லா வாழ்வாதாரத்துக்கான அமைப்புகளை விளங்கிக்கொண்டு செயற்படல் அதி முக்கியமான ஒரு விடயமாகும்.

அடிமை வாழ்வு கேவலமே என நினைத்தால் சுதந்திர வாழ்வுக்காக நம்மை நாம் தயாராகிக்கொண்டு நிமிர்ந்த நடையில் கம்பீரமாக துணிச்சலாக இறங்கியே வழிகளை தெளிவாக அமைத்திடல் முக்கியமே. சாதாரண பெண்ணாக சர்வமும் உணர்ந்திடும் நிலையில், யாரிடமும் கையேந்தாது, எதிர்பார்க்காது தன்னுடைய தகுதியை வளர்த்துக்கொண்டு பேராசை இல்லாத பெரு வாழ்வில் வாழும் நிலையை அழகாய் உயிரூட்டி ஆனந்தமாக அனைவரையும் வாழ்த்தி வரவேற்று உறவாடி உற்சாக ஊற்றாக அனைவருக்கும் முன்னுதாரணமாக விளங்கி மாற்றங்களும் தோற்றங்களும் மரியாதையாக எம்மை வழி நடத்திட நாமே எப்படியான சூழ்நிலையிலும் உறுதியான விழிப்புணர்வுக்கான நேர்த்தியான வழிகளை தேடி பயணித்தல் சுகமே. 

- திருமதி. பவானி சச்சிதானந்தன், 

வத்தளை. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்