(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
காட்டு விலங்குகளினால் விவசாய பயிர்நிலங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதம் நடத்துவதை போல் கோட்டாபய ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ ஆகியோரால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதம் நடத்த வேண்டும். பொருளாதார படுகொலையாளி என்று உயர்நீதிமன்றத்தால் பெயர் குறிப்பிடப்பட்ட பஷில் ராஜபக்ஷவை வரவேற்க ஆளும் தரப்பினர் வெட்கமில்லாமல் சென்றுள்ளார்கள். ராஜபக்ஷ குடும்ப அரசியல் இந்த நாட்டுக்கு ஆபத்தானது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (07) இடம்பெற்ற வன விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
விவசாயம், கால்நடை மற்றும் மீன்பிடி ஆகியன வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் பிரதான ஜீவனோபாயமாக காணப்படுகிறது. காட்டு யானைகளால் விவசாய பயிர் நிலங்கள் அழிக்கப்படுவதால் விவசாயிகள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்டூர் மற்றும் வவுணதீவு ஆகிய பகுதிகளில் யானைகளின் ஊடுருவல் தீவிரமடைந்துள்ளன.
யானை -மனித மோதல் பற்றி மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் வியாபாரி '40 யானைகளை நீங்கள் எண்ணிக்கை எடுத்தீர்களா, யானை அதிகாரி, யானை பிரச்சினைக்கு என்ன பிரச்சினை 'என்று கூட்டத்தில் பொறுப்பற்ற வகையில் பேசுகிறார்.
ஒரு இலட்சம் யானை வேலி அமைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தார். ஆனால் ஆட்சிக்காலத்தில் அவர் எதனையும் செய்யவில்லை. இறுதியில் நாட்டை வங்குரோத்துக்கு தள்ளி விட்டு நாட்டை விட்டு வெளியேறினார்.
காட்டு விலங்குகளினால் விவசாயத்துக்கு ஏற்பட்ட பாதிப்பை விட கோட்டாபய ராஜபக்ஷ,பஷில் ராஜபக்ஷ ஆகியோரால் இந்த நாட்டுக்கு பாரிய விளைவுகள் ஏற்பட்டுள்ளன. ஆகவே ராஜபக்ஷர்களால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்த வேண்டும்.
கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் இருக்கும் போது தமிழ் தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. தான் ஒரு தரப்பினரது ஜனாதிபதி என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு செயற்பட்டார். தறவான நிர்வாகத்தினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதால் தோற்றம் பெற்ற போராட்டத்தை தொடர்ந்து நாட்டை விட்டு தப்பியோடினார். தற்போது வெளிநாட்டு அரசியல் சூழ்ச்சி என்று புத்தகம் எழுதுகிறார்.
நாட்டை வங்குரோத்துக்கு தள்ளியவர் என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட பஷில் ராஜபக்ஷ தற்போது நாட்டுக்கு வருகை தந்துள்ளார்.இவரை அழைப்பதற்கு ஆளும் தரப்பினர்கள் வெட்கமில்லாமல் சென்றுள்ளார்கள்.இந்த நாடு வங்குரோத்து நிலையாவதற்கு பஷில் ராஜபக்ஷ பொறுப்புக் கூற வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ராஜபக்ஷ குடும்பத்தின் அரசியல் இந்த நாட்டுக்கு வினையாகவே காணப்படுகிறது.
நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் சபையின் மோட்டார் சைக்கிள் தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதம் இடம்பெற்றது.இதன்போது குறைப்பாடுகளை நான் சுட்டிக்காட்டினேன். எனது உரையை சுட்டிக்காட்டி தங்க சங்கிலி அறுப்பதாக குறிப்பிடப்படும் நபர் எனது ஆடைகளை தலை ஊடாக கழற்றுவதாக குறிப்பிட்டார். இவ்வாறானவர்களை மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்ததால் தான் இந்த நாடு வங்குரோத்து நிலையடைந்தது.
என்னை தேசதுரோகி, புலி என்று தங்கம் அறுப்பவர் என்னை விமர்சித்தார். நாட்டு மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைக்கும் போது 7 மூளையாளர் என்று குறிப்பிடப்படும் பஷில் ராஜபக்ஷவின் சகாக்கள் எங்களுக்கு எதிராக உரையாற்றுகிறார்கள்.
தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதியுடன் 2022 ஆம் ஆண்டு முதல் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறோம். குறிப்பிட்ட விடயங்களையே திரும்ப திரும்ப குறிப்பிடுகிறார். லீசிங் முறையில் காணிகள் விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமது சொந்த காணிகளையே எம் மக்கள் கோருகிறார்கள். ஆகவே காணி விடுவிப்பு விவகாரம் குறித்து ஜனாதிபதி விசேட கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம்.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை டயஸ்போராக்கல் எதிர்ப்பதாக வெளிவிவகாரத்துறை அமைச்சர் குறிப்பிட்டார். பல ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டை விட்டு சென்ற இலங்கையர்கள் தான் டயஸ்போராக்களாக உள்ளார்கள். தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் அவர்களும் உள்ளார்கள். ஆகவே சிறந்த விடயங்களுக்கு புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM