விஜயின் கோட் ( G. O. A. T) பட அப்டேட்

07 Mar, 2024 | 01:47 PM
image

விஜய் நடிப்பில் தயாராகி வரும் 'கோட்' படத்தின் புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

நட்சத்திர இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'கோட்' திரைப்படத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, பார்வதி, மோகன், ஜெயராம், அஜ்மல், யோகி பாபு, விடிவி கணேஷ், பிரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், கஞ்சா கருப்பு என ஏராளமான நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

சித்தார்த்தா நூனி ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

அறிவியல் புனைவு கதையுடன் கூடிய எக்சன் எண்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் மற்றும் கல்பாத்தி அர்ச்சனா ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இத்திரைப்படத்தில் நடித்த வரும் நடிகை மீனாட்சி சௌத்ரியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்த படக் குழுவினர் அவர் ஸ்ரீநிதி என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என அறிவித்து, பிரத்யேக புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

மேலும் இந்தத் திரைப்படத்தின் முதல் பாடல் மே மாதத்தில் வெளியாகும் என அப்படத்தின் இயக்குநரான வெங்கட் பிரபு தெரிவித்திருக்கிறார். 'கோட்' படத்தின் புதிய தகவல்கள் வெளியானதை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் அதனை இணையத்தில் வைரலாக்கி கொண்டாடி வருகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ்...

2025-02-13 17:37:33
news-image

மக்கள் செல்வன் ' விஜய் சேதுபதி...

2025-02-13 17:36:57
news-image

மீண்டும் நடிக்கும் 'காதல் ஓவியம்' புகழ்...

2025-02-13 15:52:49
news-image

கவனம் ஈர்க்கும் ராம் கோபால் வர்மாவின்...

2025-02-13 15:42:51
news-image

விஜய் தேவரகொண்டா நடிக்கும் ' கிங்டம்...

2025-02-13 15:37:05
news-image

விக்ரம் பிரபு நடிக்கும் 'லவ் மேரேஜ்'...

2025-02-13 15:33:45
news-image

மகளின் ஆசையை நிறைவேற்றும் இளையராஜா

2025-02-13 13:45:38
news-image

நடிகர் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகும்...

2025-02-12 17:05:51
news-image

நடிகர் தேவ் நடிக்கும் 'யோலோ' படத்தின்...

2025-02-12 17:06:14
news-image

நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் 'ஸ்வீட்ஹார்ட்'...

2025-02-12 17:05:29
news-image

எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கும் 'கூரன்' திரைப்படத்தின் வெளியீட்டுத்...

2025-02-12 16:50:42
news-image

தமிழ்நாட்டு விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாறு...

2025-02-12 16:51:14