நுகர்வோர் பாதுகாப்பு சட்­டங்­களை மீறி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 945 பேருக்கு  எதி­ராக வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ள­தாக நுகர்வோர் அதி­கார சபை தெரி­வித்­துள்­ளது. 

 குறிப்­பிட்ட விலைக்கு பொருட்­களை  விற்­பனை செய்­யாமை, காலம் கடந்த பொருட்­களை  விற்­பனை செய்­தமை,  பொருட்­களை பதுக்கி வைத்தமை,  பொருட்­களின் நிர்­ணய விலையை  அழித்தல், பொருட்­களின் விலையை பகி­ரங்கப்படுத்­தாமை போன்ற தவ­று­க­ளுக்­கா­கவே மேற்­படி  நபர்­க­ளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ள­தாக நுகர்வோர் அதி­கார சபையின் இரத்­தி­ன­புரி சிரேஷ்ட அதி­காரி பிரசாத்  தெரி­வித்தார்.

இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில்  எம்­பிலி­பிட்­டிய, பலாங்­கொடை, கஹ­வத்தை, எஹ­லி­ய­கொடை, பெல்­ம­துளை, கல­வான,  நிவித்­தி­கலை, இரத்­தி­ன­புரி, குரு­விட்ட, இறக்­கு­வானை ஆகிய பிர­தான நக­ரங்­க­ளிலும் அதனை சூழ­வுள்ள உப நக­ரங்­க­ளிலும் மேற்­கொள்­ளப்­பட்ட சுற்­றி­வ­ளைப்பில் 945  வியா­பா­ரிகள் சிக்­கி­ய­தாக அவர் தெரி­வித்தார்.

 இந்த வியா­பா­ரி­க­ளுக்கு எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கில் அந்­தந்த பகுதி நீதி­மன்­றங்­க­ளினால் விதிக்கப்பட்ட அபராத தொகையின் பிரகாரம் ரூ 48,51,500 வருமானம் அரசுக்கு கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.