(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
அதிகார பகிர்வு நாட்டை பிளவுப்படுத்தாது. ஆகவே அதிகார பகிர்வு தொடர்பில் அரசியல் கட்சிகள் தமது நிலைப்பாட்டை அர்ப்பணிப்புடன் நாட்டுக்காக குறிப்பிட வேண்டும்.அதிகார பகிர்வு என்றவுடன் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சந்தர்ப்பவாத அரசியலில் இருந்து முதலில் விடுப்பட வேண்டும். இன நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்பட்டால் மாத்திரமே நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியும். இருண்ட யுகத்தில் இருந்து வெளியேற அதிகார பகிர்வை சாத்தியமாக்க வேண்டும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) இடம்பெற்ற வரித்திருத்தச் சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது
பொருளாதாரத்தில் பிரபல்யமான தீர்மானங்களை எடுத்தால் என்ன நேரிடும் என்பதற்கும்,காலத்துக்கு காலம் பொருளாதார கொள்கைகளை மாற்றியமைத்தால் என்ன நேரிடும் என்பதற்கும் இலங்கை சிறந்ததொரு எடுத்துக்காட்டாக காணப்படுகிறது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு கடுமையான தீர்மானங்களை முன்னெடுத்துள்ளமையின் பயனை நாட்டு மக்கள் பெற்றுக்கொள்வார்கள்.
1991 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தியா மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டது.அப்போதைய இந்திய பிரதமர் நரசிங்க ராவ். மன்மோகன் சிங்கை நிதியமைச்சராக நியமித்து இந்தியாவின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தினார். 1991 ஆம் ஆண்டுக்கு பின்னர் பல அரசியல் கட்சிகள் இந்தியாவை ஆட்சி செய்துள்ளன ஆனால் பொருளாதார கொள்கை அரசியல் நோக்கங்களுக்காக மாற்றியமைக்கப்படவில்லை.
இலங்கை பல்லின சமூகம் வாழும் நாடு தமிழ்,முஸ்லிம்,சிங்கள மக்கள் இலங்கையர் என்ற அடிப்படையில் கடந்த காலங்களை மறந்து இலங்கையர் என்ற அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்பட்டால் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியும். தமிழ் அரசியல் தலைமைகளுக்கு வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியி சமஸ்டி முறைமையை கோருகிறார்கள்,பிற தரப்பினர் நாட்டுக்குள் அரசியல் தீர்வை கோருகிறார்கள்.அதிகார பகிர்வு நாட்டை பிளவுப்படுத்தாது.ஆகவே சமஷ்டி மற்றும் அதிகார பகிர்வு என்பவற்றால் நாடு பிளவடையும் என்ற கோசத்தில் இருந்து முதலில் விடுபட வேண்டும்.பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்துள்ள ஐரோப்பிய நாடுகளில் சமஷ்டி முறைமை காணப்படுகிறது.அந்நாடுகளின் இறைமைக்கும்,தேசிய பாதுகாப்புக்கும் எவ்வித அச்சுறுத்தலும் தோற்றம் பெறவில்லை.ஆகவே முற்போக்காக சிந்திக்க வேண்டும்.
அதிகார பகிர்வு தொடர்பில் அரசியல் கட்சிகள் அனைத்தும் அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் நாட்டுக்காக தமது நிலைப்பாட்டை குறிப்பிட வேண்டும். 1956 ஆம் ஆண்டு தனிசிங்கள சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்போது கொல்வின் ஆர் டி. சில்வா ' இரு நாடுகள் ஒரு மொழி- ஒரு மொழி இரு நாடுகள்' என்று குறிப்பிட்டார்.இதனை தொடர்ந்து 30 வருடகால யுத்தம் தோற்றம் பெற்றது.யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இரண்டு மொழிகள் அரச கரும மொழிகளாக்கப்பட்டன. 1956 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் -சிங்கள மொழிகளை அரச கரும மொழிகளாக அறிவித்திருந்தால் யுத்தம் தோற்றம் பெற்றிருக்காது.
அதிகார பகிர்வு தொடர்பில் முன்னாள் பிரதமர் டட்லி சேனாநாயக்க, தந்தை செல்வா ஆகியோர் ஒன்றிணைந்து நடவடிக்கைகளை எடுத்த போது கொல்வின் ஆர்.டி.சில்வா 'டட்லிகே வடே மசாலா வடே' என்று எதிர்ப்பு பேரணியை முன்னெடுத்திருந்தார்.சந்தர்ப்பவாத அரசியலினால் நாடு பாரிய நெருக்கடிகளை வரலாற்றில் எதிர்க்கொண்டது. ஆகவே எதிர்காலத்துக்காக தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் விட்டுக் கொடுப்புடன் செயற்பட வேண்டும்.
அதிகார பகிர்வு தொடர்பில் பேச்சுக்கள் முன்னெடுக்கும் போது ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.உலகளாவிய மட்டத்தில் வாழும் டயஸ்போராக்கல் பிரிவினைவாதம் இதனி ஈழம் என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு செயற்படுகிறார்கள். இவர்களை மறந்து விட வேண்டும்.
மத்திய அரசின் அரசியல் செயலொழுங்கில் இருந்து தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளோம் என்று தமிழ் மக்கள் கருதுகிறார்கள். அந்த எண்ணம் மாற்றம் பெற வேண்டும் அதற்கு அரசியலமைப்பு ரீதியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும்.அதிகார பகிர்வு குறித்து உயர்நீதிமன்ற நீதியரசர்களான டெப் குணரத்ன மற்றும் உபாலி அபேரத்ன ஆகியோர் 'தனி சமஷ்டி - பிற நாட்டை அடிப்படையாக கொள்ளாது' என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஆகவே அதிகார பகிர்வு நாட்டை பிளவுப்படுத்தும் என்ற கோசத்தில் இருந்து விடுபட வேண்டும்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நீதி கோருவது நியாயமானது. உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கும் போது எதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் தெற்கில் உள்ள தரப்பினர் கடுமையாக எதிர்க்கிறார்கள். நாட்டுக்கு வெளியில் உள்ள டயஸ்போராக்கல் எதிர்க்கிறார்கள். இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் 2 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பொறுப்புக் கூறல் விவகாரத்தில் இலங்கை மந்தகதியில் செயற்படுவதால் சுயாதீனமாக சாட்சித்திரட்டி இலங்கைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உண்மை மற்றும் பொறுப்புக் கூறல் ஆணைக்குழுவை அமைப்பதால் இராணுவத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தான் இந்த ஆணைக்குழு அமைக்கப்படவுள்ளது.
நாட்டின் உள்ளக பிரச்சினைக்கு சர்வதேசத்தின் தலையீடு இல்லாமல் அரசியலமைப்பு ஊடாக தீர்வு காண்பது இந்த ஆணைக்குழுவின் பிரதான நோக்கமாகும்.இந்த இருண்ட யுகத்தில் இருந்து விடுப்பட வேண்டும்.இந்த ஆணைக்குழு தமிழ் மக்களுக்காக மாத்திரம் அமைக்க உத்தேசிக்கவில்லை. 1991 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து பெருமபலான முஸ்லிம்கள் 24 மணிநேரத்துக்குள் வெளியேற்றப்பட்டார்கள்.இவ்வாறான பிரச்சினைகளுக்கு இன்றும் தீர்வு கிடைக்கவில்லை.ஆகவே எதிர்காலத்துக்காகவேனும் அனைவரும் விட்டுக் கொடுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM