'சமாதானம், ஜனநாயகத்துக்கான செயற்கை தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிமாற்றம்' எனும் தலைப்பில் வவுனியா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாநாடு நாளை (07) ஆரம்பமாகவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ரி.மங்களேஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு பம்பைமடுவில் அமைந்துள்ள பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (06) இடம்பெற்றது.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த ரி.மங்களேஸ்வரன்,
வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் ஆசிய பசுபிக் சமாதான ஆராய்ச்சி அமைப்பும் இணைந்து “சமாதானம் மற்றும் ஜனநாயகத்துக்கான செயற்கை தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிமாற்றம்” என்ற தலைப்பில் இம்முறை ஆய்வு மாநாட்டை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.
இதில் 250க்கும் மேற்பட்ட கல்வியியலாளர்களும் ஆராய்ச்சியாளர்களும், நல்லிணக்கத்துறையில் சிறப்புத்தேர்ச்சி பெற்றவர்களும், ஊடக மற்றும் தொழில்நுட்ப புலமையாளர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.
இங்கு சர்வதேச நாடுகளை சேர்ந்த புலமையாளர்களின் 200க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அத்துடன், கலாசாரம் மற்றும் சமாதானத்துக்கான மருத்துவ ரீதியான போக்கு, சமாதானம் மற்றும் ஜனநாயகத்துக்கான செயற்கை தொழில்நுட்பம், சமாதானத்துக்கான கல்வியும் அதன் சவால்களும் என்ற தலைப்பில் குழுக் கலந்துரையாடல்களும் இடம்பெறும்.
இந்த மாநாடானது நாளைய தினம் ஆரம்பமாகி தொடர்ச்சியாக மூன்று நாட்கள் இடம்பெறும். இம்மாநாட்டில் நல்லிணக்கம் தொடர்பாக சர்வதேச புலமையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் ஒரு நாட்டில் எவ்வாறு சமாதானம் மற்றும் நல்லுறவை ஏற்படுத்த முடியும் என்ற அவர்களது அனுபவங்களையும் பகிரவுள்ளனர்.
எனவே, இந்த மாநாட்டின் ஊடாக அது தொடர்பான தெளிவினை பெற்றுக்கொள்ள முடியும். இந்த விடயத்தில் அக்கறை உடையவர்களை மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அழைத்து நிற்கின்றோம் என தெரிவித்தார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM