'குளோபல் ஸ்டார்' ராம்சரணுடன் இணையும் நட்சத்திர வாரிசு

06 Mar, 2024 | 10:01 PM
image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத பான் இந்திய திரைப்படமொன்றில் அவருக்கு ஜோடியாக நடிக்க மறைந்த பொலிவுட் நடிகை ஸ்ரீதேவியின் மகளும், நடிகையுமான ஜான்வி கபூர் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதனை அவரது பிறந்தநாளில் படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு, வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், ‘இசைப்புயல்’ ஏ. ஆர் . ரஹ்மானின் இசையில், பான் இந்திய திரைப்படமாக உருவாகும் பெயரிடப்படத்தில் ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் முதன்மையான வேடத்தில் நடிக்கிறார்.

இதனை விருத்தி சினிமாஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய பட நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாறு தயாரிக்கிறார். இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் வழங்குகிறது. 

பொலிவுட் நடிகை ஜான்வி கபூர் முதன்முதலாக ராம் சரணுடன் இணைந்திருப்பதாலும், அவர் தென்னிந்திய திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருவதும் அவருடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right