திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற நேற்றைய (05) சிவராத்திரி நிகழ்வில் தமிழ்நாடு, திருநெல்வேலி பெருங்குளம் திருக்கைலாய பரம்பரை செங்கோல் ஆதீனத்தின் 103வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச சத்தியஞான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் விசேட அழைப்பாளராக கலந்துகொண்டு ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார்.
திருக்கோணேஸ்வரர் ஆலய மகா சிவராத்திரி நிகழ்வுகளை முன்னிட்டு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் இந்தியாவில் இருந்து ஆதீனங்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாக விளங்கும் திருக்கோணேஸ்வரம் இலங்கையின் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றாக விளங்குகிறது.
இக்கோயில் உலகிலுள்ள வழிபாட்டுத் தலங்களில் மிகப் பழமையானதாகும். இதன் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி விழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது.
7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் இக்கோயிலின் பெருமைகளை பதிகங்களாக பாடியுள்ளமை சிறப்பம்சமாகும்.
தற்போது இடம்பெற்று வரும் திருக்கோணேஸ்வர ஆலயத்தின் சிவராத்திரி நிகழ்வுகளில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM