வெளிநாட்டு அரசமுறை கடன்கள் வெகுவிரைவில் மறுசீரமைக்கப்படும் என்றும் 2023 முதல் 2027 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கு கடன் செலுத்தலுக்காக காலவகாசம் பெற்றுக் கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அத்துடன் பொருளாதாரம் ஆரம்ப கட்ட ஸ்திரப்படுத்தலில் காணப்படுகிறது என்றும் நாட்டு மக்களுக்கு தொடர்ந்து நிவாரணம் வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தற்போது விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாராளுமன்றில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி,
புத்தகம், மருந்து பொருட்கள் உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட பொருட்கள் வற் வரி பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நிவாரணம் வழங்கப் போவதில்லை என்றும் கூறினார்.
இதேவேளை, ஒரு தரப்பினர் அதிகாரத்துக்காக பொய்யுரைக்கிறார்கள். நான் அதிகாரத்துக்காக செயல்படவில்லை என்றும் நாட்டுக்காகவே செயற்படுகிறேன் என்றும் கூறினார்.
மேலும் அழகிய வார்த்தைகள், வாக்குறுதிகளால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண முடியாது என்று குறிப்பிட்ட ஜனாதிபதி கடுமையான தீர்மானங்கள் ஊடாகவே நெருக்கடியில் இருந்து மீள முடியும் என்றும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM