இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு செவ்வாய்க்கிழமை (5) இலங்கை பிரஜா உரிமை வழங்கி வைக்கப்பட்டது.
90 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தம் காரணமாக இந்தியாவுக்குச் சென்ற இலங்கையர்களுக்கு இந்தியாவில் குழந்தைகள் பிறந்த நிலையில் யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர் மீண்டும் இலங்கைக்கு வந்திருந்தனர்.
நாட்டிற்கு வந்த இந்தியாவில் பிறந்த இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு இலங்கை பிரஜா உரிமை பெறுவதில் சிக்கல் நிலமை காணப்பட்டிருந்தது.
இதனை அடுத்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அனுசரணையில் ஒபர் சிலோன் எனப்படும் அரசு சார்பற்ற நிறுவன பங்களிப்போடு இவர்களுக்கான பிரஜா உரிமை பெற்றுக் கொடுக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
இதன் ஒரு கட்டமாக 22 வயதுக்கு மேற்பட்ட இந்தியாவில் பிறந்த இலங்கையர்களின் பிள்ளைகள் 71 பேருக்கு இன்று பிரஜாவுரிமை வழங்கப்பட்டது.
இவ்வாறு பிரஜாவுரிமை பெற்றவர்கள் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர்களே பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் வவுனியா அரசாங்க அதிபர் சரத் சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி. திரேஸ்குமார், குடிவரவு குடியகழ்வு திணைக்கள பிரதி கட்டுப்பாட்டாளர் இ. எச். ஜி. பிரசங்க, ஒபர் நிறுவன தலைவி செல்வி. சி. சூரியகுமாரி உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM