(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார பாராளுமன்ற பதில் செயலாளரான பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவிடம் கையளித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (5) பிரதி செயலாளர் நாயகத்திடம் எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா பிரேரணை தீர்மானத்தைக் கையளித்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி உறுப்பினர்கள்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,தேசிய மக்கள் சக்தி மற்றும் சுயாதீன எதிரணி உறுப்பினர்கள் உள்ளிட்ட 44 பேர் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்திடம் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்படும் போது,ஐக்கிய மக்கள் சக்தி செயலாளருடன் எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்ல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சுயாதீன எதிரணி உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், சுயாதீன உறுப்பினர் சந்திம வீரக்கொடி ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.
நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் நிறைவேற்றப்படும் போது சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு புறக்கணிப்பு மற்றும் அரசியலமைப்பை மீறி சபாநாயகர் செயற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் மற்றும் பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பாக அரசியலமைப்பு பேரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் அரசியலமைப்பை மீறும் வகையில் சபாநாயகர் நடந்துகொண்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்க்கட்சியினர் கொண்டு வந்துள்ளனர்.
சபாநாயகரின் செயற்பாடுகள் அரசியலமைப்பையும் பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளையும் மீறும் வகையில் இருப்பதாகவும், இவ்வாறாக பாராளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களின் உரிமைகள் மற்றும் சிறப்புரிமைகளை பாதுகாக்க கடமைப்பட்டுள்ள சபாநாயகர், அவற்றை மீறி செயற்படுவதாகவும், இதன்படி சபாநாயகரின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் இருந்து மீறி செயற்படுவதாகவும்,இதனால் பாராளுமன்றத்தில் தற்போதைய சபாநாயகர் மீது மேலும் நம்பிக்கைகொள்ள முடியாது என்றும் நம்பிக்கையில்லா பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM