சோமாலிய கடற்கொள்ளையர்களால் 8 இலங்கையர்களுடன் கடத்தப்பட்ட கப்பலை விடுவிக்க கடற்கொள்ளையர்கள் கப்பம் கோரியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கப்பலானது இலங்கைக்கு சொந்தமானதல்லவெனவும் அதில் பணியாற்றும் பணியாளர்கள் 8 பேரும் இலங்கையர்கள் என இலங்கை கடற்படை நேற்று தெரிவித்திருந்தது.

இலங்கையின் தேசியக் கொடியுடன் சென்றுகொண்டிருந்த எரிபொருள் தாங்கிக் கப்பலான அரிஸ் 13 என்ற கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக சர்வதேச செய்திகள் வெளியாகியிருந்த நிலையிலேயே அக் கப்பலை விடுவிப்பதற்கு சோமாலிய கடற்கொள்ளையர்கள் கப்பம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.