மாத்தறை நில்வளா தடுப்பணை பிரச்சினையை ஆராயும் தெரிவுக்குழு தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும் ; சஜித் சபாநாயகரிடம் கோரிக்கை

05 Mar, 2024 | 09:32 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

மாத்தறை நில்வளா தடுப்பணை பிரச்சினை குறித்து ஆராயும் தெரிவுக் குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05) மாத்தறை நில்வளா தடுப்பணை பிரச்சினை குறித்து ஆரா நியமிக்கப்பட்ட தெரிவுக்குழு உறுப்பினர்களை சபாநாயகர் அறிவிப்பு செய்தபோது, அதன் தலைவர் பதவிக்கு அமைச்சர் பவித்ரா தேவியின் பெயரை குறிப்பிட்டபோதே எதிர்க்கட்சித் தலைவர் ஒங்குப்பிரச்சினை ஒன்றை முன்வைத்து இவ்வாறு தெரிவித்தார். 

இதுதொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,  

நீர்ப்பாசன திணைக்களம், நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மற்றும் பல அரச நிறுவனங்கள் ஒன்றிணைந்து நிர்மாணித்த இந்த தடுப்பணையினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் நெருக்கடிக்களைச் சந்தித்து வருகின்றனர்.

இது தொடர்பில்  பல தடவைகள் பாராளுமன்றத்தில் நில்வளா தடுப்பணை விவகாரம் குறித்து கேள்விகளை எழுப்பினோம். இந்த பிரச்சினையை எதிர்க்கட்சியே தொடர்ச்சியாக முன்வைத்தது.எனவே இவ்விடயம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை இடம்பெற வேண்டும்.

இந்த விவகாரம் தொடர்பாக ஆராய தெரிவுக் குழுவை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதால், இந்த தெரிவுக் குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குங்கள். நீர்ப்பாசன அமைச்சர்  பவித்ரா வன்னியாராச்சி சம்பந்தப்பட்ட விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சராக இருப்பதால் அவரால் இது தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்த முடியாது. அதனால் தெரிவுக் குழுவின் தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். மாநகர வேட்புமனு  நிராகரிப்புக்கு எதிராக...

2025-03-24 14:46:15
news-image

தலதா மாளிகை குறித்து சமூக ஊடகங்களில்...

2025-03-24 14:49:00
news-image

விபத்துக்குள்ளான விமானத்தில் எவ்வித கோளாறும் இல்லை...

2025-03-24 14:39:52
news-image

அரிசி மூடைகளை ஏற்றிச் சென்ற லொறி...

2025-03-24 13:59:27
news-image

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு கல்முனையில்...

2025-03-24 14:05:28
news-image

காசநோயால் கடந்த வருடம் 9 பேர்...

2025-03-24 13:21:36
news-image

வவுனியாவில் காச நோய் தொடர்பான விழிப்புணர்வு...

2025-03-24 13:22:28
news-image

இரவு நேர களியாட்ட விடுதியில் ஏற்பட்ட...

2025-03-24 13:09:09
news-image

வீரகெட்டியவில் உரிமையாளர் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த...

2025-03-24 12:37:03
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-24 12:39:24
news-image

இலங்கையில் முதல் முறையாக விந்தணு வங்கி

2025-03-24 12:32:49
news-image

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு - மற்றுமொரு...

2025-03-24 11:34:10