மாலைதீவும் சீனாவும் பாதுகாப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.
மாலைதீவின் பாதுகாப்பு அமைச்சு இது தொடர்பாக தெரிவிக்கையில், சீனாவின் இராணுவ உதவிகள் தொடர்பாக திங்கட்கிழமை ஒப்பந்தமொன்று கையெழுத்திடப்பட்டதாக தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை இந்த ஒப்பந்தம் பலப்படுத்தும் என மாலைதீவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மாலைதீவில் உள்ள 89 இந்தியப் படையினரம் மே 10 ஆம் திகதிக்கு முன்னர் வெளியேற வேண்டும் என மாலைதீவின் புதிய ஜனாதிபதி மொஹம்மட் முய்ஸுவின் அரசாங்கம் உத்தரவிட்டு சில வாரங்கில் சீன- மாலைதீவு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் கசான் முனுமூன், சீனாவின் சர்வதேச இராணுவ ஒத்துழைப்புகளுக்கான அலுவலகத்தின் பிரதிப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஸாங் பாவோகுன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தம் தொடர்பான விபரங்கள் உத்தியோபூர்வமாக வெளியிடப்படவில்லை. எனினும், சீனாவுக்கு இராணுவ உதவிகளை இலவசமாக வழங்க சீனா இணங்கியுள்ளதாக மாலைதீவு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM