நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
எல்ல - ஹாலிஎல, பெரகல வீதியில் மில்லகம சந்திக்கு அருகில் நேற்று திங்கட்கிழமை (04) காலை பதுளையிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த வேன் ஒன்று பாதசாரிகள் கடவையில் வீதியை கடக்க முற்பட்டபவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் கந்தேகும்புர ஹெல ஹல்பே பிரதேசத்தில் வசிக்கும் 89 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, நவகமுவ - கொரதொர, வதுரம்முல்ல வீதியில் விபத்தில் கடுவலை கொரதொட்ட பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கொங்கஹஹேன பிரதேசத்தில் பாதசாரி கடவையை கடக்கும்போது கொரத்தோட்டையில் இருந்து வதுரமுல்ல நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்று பெண் மீது மோதியுள்ளது.
அத்துடன், நேற்றிரவு பெலியத்த - தங்காலை வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிட்டினமலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கோட்டை-பஸ்தியான் மாவத்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தெஹிவளையில் வசிக்கும் 74 வயதுடைய முதியவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று பிற்பகல் கொழும்பு - மட்டக்களப்பு வீதிப் பகுதியில் லொறி ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதியதில் முச்சக்கரவண்டி வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. முச்சக்கரவண்டியின் பின்னால் பயணித்த நபர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். அவர்களின் அடையாளம் இன்னும் அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படவில்லை.
இறுதியாக, தலாவ பிரதேசத்தில் பாதெனிய - அநுராதபுரம் வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நாட்டில் மேலும் வீதி விபத்துக்கள் இடம்பெறாமல் தடுக்க வீதியில் பயணிக்கும் அனைவரும் மிகுந்த அவதானத்துடன் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்குமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM