அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவதை மாநிலங்கள் தடுக்க முடியாது என என அந்நாட்டு உயர்நீதிமன்றம் ஏகமனதாக தீர்ப்பளித்துள்ளது.
2021 ஜனவரி 6 ஆம் திகதி அமெரிக்கப் பாராளுமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களை ஆதரித்தார் என்ற குற்றச்சாட்டின் காரணமாக, கொலராடோ மாநில குடியரசுக் கட்சி உட்கட்சித் தேர்தல் வாக்குச்சீட்டுகளில் ட்ரம்பின் பெயர் இடம்பெற முடியாது என கொலராடோ மாநில நீதிமன்றம் கடந்த டிசெம்பர் மாதம் தீர்ப்பளித்திருந்தது.
இது தொடர்பாக மேன்முறையீட்டு வழக்கு அமெரிக்க உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
இந்நிலையில், கொலராடோ உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக 9:0 விகிதத்தில் அமெரிக்க சமஷ்டி உச்சநீதிமன்ற நீதிபதிகள் திங்கட்கிழமை (04) தீர்ப்பளித்தனர்.
மேற்படி குற்றச்சாட்டின் கீழ் போட்டியிடுவதை தடுக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு கிடையாது எனவும், அமெரிக்கப் பாராளுமன்றத்துக்கே அத்தகைய அதிகாரம் உள்ளது எனவும் அமெரிக்க உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இத்தீர்ப்பானது அமெரிக்காவுக்கான ஒரு பெரும் வெற்றி என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கொலராடோ உட்பட 15 மாநிலங்களில் குடியரசுக் கட்சியின் உட்கட்சித் தேர்தல் இன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM