கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் கீதா குமாரசிங்க தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கும் அபாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

கீதா குமாரசிங்க இன்னும் சுவிட்ஸர்லாந்தின் பிரஜையே என்பதைச் சுட்டிக்காட்டி, இதனால் அவர் இலங்கை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாது என்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

ஒரு நாட்டின் பிரஜை மற்றொரு நாட்டின் அரசியலில் முக்கிய பதவிகளை வகிக்க முடியாது என்பது உலகின் பெரும்பாலான நாடுகளின் சட்டமாகும். இலங்கையும் இதற்கு விதிவிலக்கல்ல!

இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெறும் பட்சத்தில் கீதா குமாரசிங்க சுவிட்ஸர்லாந்தின் பிரஜாவுரிமையை திருப்பிக் கொடுத்திருக்கவேண்டும். எனினும் இதுவரை அவர் அதைத் திருப்பியளிக்கவில்லை.