தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ளும் வரலட்சுமி சரத்குமார்

04 Mar, 2024 | 08:10 PM
image

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலய் சச்தேவ்வுக்கும் மும்பையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி 'போடா போடி' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து 'விக்ரம் வேதா', 'சண்டக்கோழி 2', 'சர்க்கார்', 'கொன்றால் பாவம்', 'ஹனுமான்' போன்ற படங்களில் நடித்து முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வருகிறார். இவருக்கும் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலய் சச்தேவ் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் இரு வீட்டார் பெற்றோர்களின் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் இவர்களின் திருமண நிச்சயம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. விரைவில் திருமணத் திகதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே நடிகை வரலட்சுமி திருமணம் செய்து கொள்ளவிருக்கும் மும்பை தொழிலதிபர் நிக்கோலய் சச்தேவ் ஏற்கனவே திருமணமானவர் என்பதும், அவருக்கு 15 வயதில் மகள் மகள் ஒருவர் இருக்கிறார் என்பதும், மனைவியை முறைப்படி விவாகரத்து செய்த பிறகு தற்போது வரலட்சுமியை திருமணம் செய்து கொள்கிறார் என்பதும் குறிப்பிட்டத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்