புத்தளம் கருவலகஸ்வெவ தேவநுவர பகுதியில் காட்டு யானையொன்று கிராமத்திற்குள் உட்புகுந்து பயிர்களை அழித்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) இரவு காட்டு யானையொன்று மின்சாரவேலியை உடைத்துக் கொண்டு ஒருவருடைய வீட்டுத் தோட்டத்திற்குள் நுழைந்து பயன்தரும் தென்னை, மற்றும் வாழை மரங்களை துவம்சம் செய்துள்ளது.
குறித்த யானையை விரட்டுவதற்கு முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை என அப்பகுதி மக்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியில் இரவு பகலாக காட்டு யானைகள் கிராமத்திற்குள் சஞ்சரிப்பதாகவும் இதனால் தாம் அச்சமடைந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
காட்டு யானைகளை காட்டினுல் விரட்டி இதற்கான உரிய தீர்வைப் பெற்றுத் தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM