காணாமல் போனவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் பெண் ஒருவர் காணாமல் போன  தனது உறவுக்காக கதறி அழுதவாறு மயங்கி விழுந்தார்.

வவுனியாவில்  19ஆவது நாளாக இன்றும், காணாமல் போனவர்களின் உறவினர்களால் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அரசியல் கைதிகளின் விடுதலை, அவசர காலச் சட்டத்தினை உடனே இரத்துச் செய்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு பதில் கூறவேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமது மக்கள் பிரதிநிதிகள் குறிப்பாக ஜனாதிபதி, பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர் தமது நியாயமான போராட்டத்திற்கு நேரில் வந்து வாக்குறுதி அளிக்கும் வரையில் தமது போராட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்து வருகின்றார்கள்.