போரா சமூக ஆன்மீகத் தலைவர் ஜனாதிபதியை சந்தித்தார்

Published By: Vishnu

04 Mar, 2024 | 01:35 AM
image

போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி புனித செய்யதினா முஃபத்தல் செய்புதீன் சாஹிப் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (3) பிற்பகல் பெஜெட் வீதியிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

போரா சமூகத்தின் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்கள் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இலங்கை, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் வாழ்கின்றனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்ட கலாநிதி செய்யதினா முஃபத்தல் செய்புதீன், இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி நடைமுறைப்படுத்தியுள்ள வேலைத்திட்டத்தைப் பாராட்டினார்.

அத்துடன், பம்பலப்பிட்டி போரா பள்ளிவாசலை அண்டி  நடத்தப்படும் போரா மாநாட்டை இவ்வருடம் நடத்துவது தொடர்பிலும் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

கடந்த 4 வருடங்களாகப் போரா சமூகத்தினர் ஆற்றிய சமய சேவைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் அடங்கிய புத்தகமும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

போரா சமூகத்தின் தலைவர்கள் உள்ளிட்ட குழுவினர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முகத்துவாரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2025-02-11 18:38:34
news-image

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

2025-02-11 17:18:28
news-image

ஜப்பானிய காகித மடிப்புக் கலையை ஊக்குவிக்கும்...

2025-02-11 17:21:24
news-image

அரச சேவையில் 7,456 பதவி வெற்றிடங்கள்...

2025-02-11 17:22:36
news-image

தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுமாறு கோரி...

2025-02-11 17:04:54
news-image

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் விடுத்துள்ள...

2025-02-11 16:25:59
news-image

வவுனியாவில் 2 கிலோ கஞ்சாவுடன் இளைஞன்...

2025-02-11 16:23:23
news-image

திருகோணமலையில் நான்கு வலம்புரிச் சங்குகளுடன் மூவர்...

2025-02-11 16:15:00
news-image

முச்சக்கரவண்டி மோதி ஒருவர் உயிரிழப்பு ;...

2025-02-11 16:10:33
news-image

புதிய மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தை...

2025-02-11 16:45:37
news-image

கஞ்சா, ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள்...

2025-02-11 16:02:43
news-image

நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்படாது - இலங்கை...

2025-02-11 15:52:31