அர்ஷான், ஷாருஜனின் அபார துடுப்பாட்டங்கள் புனித பெனடிக்டின் வெற்றியை உறுதிசெய்தன; 7 நாட்களில் 2ஆவது தடவையாக வெஸ்லியை வென்றது புனித பெனடிக்ட்

Published By: Vishnu

04 Mar, 2024 | 01:13 AM
image

(நெவில் அன்தனி)

வெஸ்லி கல்லூரிக்கு எதிராக பி.சரவணமுத்து ஓவல் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (02) நடைபெற்ற 4ஆவது வருடாந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்களால் வெற்றியீட்டி அருட்சகோதரர் லூக் கிறகறி கேடயத்தை புனித பெனடிக்ட் சுவீகரித்தது.

இந்த இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான வருடாந்த 2 நாள் கிரிக்கெட் போட்டியில் 46 ஓட்டங்களால் வெற்றிபெற்ற புனித பெனடிக்ட் கல்லூரி, வெஸ்லிக்கு எதிராக 7 நாட்கள் இடைவெளியல் இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்தது.

ஒரு வாரத்துக்கு முன்னர் நடைபெற்ற வண. ஜேம்ஸ் காட்மன் கிண்ணத்துக்கான வருடாந்த 2 நாள் கிரக்கெட் போட்டியில் 46 ஓட்டங்களால் புனித பெனடிக்ட் வெற்றிபெற்றிருந்தது.

ஸ்டீவன் அர்ஷான் ஜோசப், அணித் தலைவர் சண்முகநாதன் ஷாருஜன் ஆகிய இருவரும் குவித்த அரைச் சதங்களும் 4ஆவது விக்கெட்டில் அவர்கள் இருவரும் பகிர்ந்த சாதனைமிகு 111 ஓட்டங்களும் புனித பெனடிக்ட் அணியின் வெற்றியை இலகுவாக்கின.

இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான வருடாந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பதிவான சகல விக்கெட்களுக்குமான அதிசிறந்த இணைப்பாட்டம் இதுவாகும்.

வெஸ்லி கல்லூரியினால் நிர்ணயிக்கப்பட்ட 218 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய புனித பெனடிக்ட் அணி 48.3 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 220 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

சமிந்து பீரிஸ், ஜனிந்து நந்தசேன ஆகிய இருவரும் 71 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

சமிந்த பீரிஸ் 35 ஓட்டங்களையும் ஜனிந்து நந்தசேன 29 ஓட்டங்களையும் பெற்றனர்.

தொடர்ந்து ஸ்டீவ் அர்ஷான் ஜோசப் 63 ஓட்டங்களையும் சண்முகநாதன் ஷாருஜன் ஆட்டம் இழக்காமல் 58 ஓட்டங்களையும் பெற்று அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய வெஸ்லி 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 217 ஓட்டங்களைப் பெற்றது.

கவிந்து அமரசிங்க 54 ஓட்டங்களையும் சனிது அமரசிங்க 34 ஓட்டங்களையும் தினேத் சிகேரா 33 ஓட்டங்களையும் லினால் சுபசிங்க 26 ஓட்டங்களையும் நிலுபுல் லியனகே ஆட்டம் இழக்காமல் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் செல்வநாயகம் அக்ஷார் 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அயேஷ் கஜநாயக்க 40 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாரிஸ் ஒலிம்பிக் : குறுந்தூர ஓட்டங்களில்...

2024-04-23 12:28:48
news-image

புளோரிடாவில் திறந்தவெளி நீச்சலில் டிலன்க ஷெஹான்...

2024-04-23 12:29:46
news-image

வரலாறு படைத்துவரும் டுப்லான்டிஸின் உலக சாதனை...

2024-04-23 12:18:34
news-image

மும்பை இண்டியன்ஸை எதிர்த்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ்...

2024-04-23 02:27:37
news-image

ஐபிஎல்லில் 200 விக்கெட்களை வீழ்த்திய முதல்...

2024-04-22 23:34:30
news-image

பெண்கள் மட்டும் லண்டன் மரதன்: ஜெப்ச்சேர்ச்சேர்...

2024-04-22 20:13:21
news-image

சப்மனின் அதிரடியால் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து ...

2024-04-22 17:07:36
news-image

டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியில் வலை பந்துவீச்சாளராக...

2024-04-22 15:38:44
news-image

குறைந்த மொத்த எண்ணிக்கைகளைக் கொண்ட போட்டியில்...

2024-04-22 01:19:28
news-image

பரபரப்பான போட்டியில் பெங்களூருவை கடைசிப் பந்தில்...

2024-04-21 21:19:55
news-image

மகளிர் ரி20 உலகக் கிண்ண தகுதிகாணுக்கு...

2024-04-21 15:13:32
news-image

பவர் ப்ளேயில் சாதனை படைத்து நடராஜனின்...

2024-04-21 06:23:36