(நெவில் அன்தனி)
வெலிங்டன் பேசின் ரிசேர்வ் விளையாட்டரங்கில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட் குவியலை நெதன் லயன் பூர்த்தி செய்ததன் பலனாக 172 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா அமோக வெற்றிபெற்றது.
போட்டியின் நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை (03)காலை வெற்றிக்கு மேலும் 258 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 111 ஓட்டங்கள் என்ற நிலையில் இருந்து தொடர்ந்த நியூஸிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 196 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
இப் போட்டியில் நியூஸிலாந்து சாதிப்பதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால், நெதன் லயன் காலையிலேயே விக்கெட்களை வீழ்த்தி 10 விக்கெட் குவியலைப் பதிவு செய்ததால் நியூஸிலாந்தின் வாய்ப்பு நழுவிப்போனது.
நியூஸிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரங்களான ரச்சின் ரவிந்த்ரா, டொம் ப்ளண்டல், க்லென் பிலிப்ஸ் ஆகியோரின் விக்கெட்களை நெதன் லயன் வீழ்த்தி அவுஸ்திரேலியாவை வெற்றிப்பாதையில் இட்டார்.
நியூஸிலாந்து சார்பாக ரச்சின் ரவிந்த்ரா 59 ஓட்டங்களையும் டெரில் மிச்செல் 38 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றனர்.
அவர்கள் இருவரும் 2ஆவது இன்னிங்ஸில் 4ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 67 ஓட்டங்களே நியூஸிலாந்தின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அதிசிறந்த இணைப்பாட்டமாக இருந்தது.
இது இவ்வாறிருக்க இந்தப் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்ததன் மூலம் சாதனை ஒன்றை நெதன் லெதன் சமப்படுத்தினார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 9 அணிகளுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 5 விக்கெட் குவியல்களைப் பதிவுசெய்த முரளிதரன், ஷேன் வோன் ஆகிய இருவரது சாதனைகளை நெதன் லயன் சமப்படுத்தினார்.
இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா, அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, பங்களாதேஷ், இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூஸிலாந்து ஆகியவற்றுக்கு எதிராகவே அந்த நாடுகளின் சொந்த மண்ணில் நெதன் லயன் 5 விக்கெட் குவியல்களைப் பதிவுசெய்துள்ளார்.
நெதன் லயன் முதலாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்களையும் கைப்பற்றினார்.
இந்தப் போட்டியின் 1ஆவது இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா பெற்ற 383 ஓட்டங்களே நான்கு இன்னிங்ஸ்களிலும் அதிகூடிய மொத்த எண்ணிக்கையாக அமைந்தது.
மற்றைய 3 இன்னிங்ஸ்களிலும் 200 ஓட்டங்களுக்கு குறைவாகவே பெறப்பட்டது.
எண்ணிக்கை சுருக்கம்
அவுஸ்திரேலியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 383 (கெமரன் க்றீன் 174 ஆ.இ., மிச்செல் மார்ஷ் 40, உஸ்மான் கவாஜா 33, ஸ்டீவன் ஸ்மித் 31, மெட் ஹென்றி 70 - 5 விக்.)
நியூஸிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 179 (க்ளென் பிலிப்ஸ் 71, மெட் ஹென்றி 42, டொம் ப்ளண்டல் 33, நெதன் லயன் 43 - 4 விக்.)
அவுஸ்திரேலியா 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 164 (நெதன் லயன் 41, கெமரன் க்றீன் 34, க்ளென் பிலிப்ஸ் 45 - 5 விக்., மெட் ஹென்றி 36 - 3 விக்.)
நியூஸிலாந்து 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 196 (ரச்சின் ரவிந்த்ரா 59, டெரில் மிச்செல் 38, நெதன் லயன் 65 - 6 விக்., ஜொஷ் ஹேஸ்ல்வூட் 20 - 2 விக்.)
ஆட்டநாயகன்: கெமரன் க்றீன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM