பொருட்களின் விலையை குறைக்க பணம் இல்லாத நிலையில் ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு பணம் ஒதுக்கீடு - சஜித்

Published By: Vishnu

03 Mar, 2024 | 10:02 PM
image

பால் தேனீர், தேனீர், தின்பண்டங்கள், சிற்றூண்டிகள், சாப்பாடுப் பொதிகள், கொத்து போன்றவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன. 24 மணி நேரமும் 365 நாட்களும் நாட்டில் விலை அதிகரிப்பு கலாச்சாரமே இருந்து வருகிறது. விலைவாசி உயர்ந்து, மக்களின் வாழ்க்கை சீரழிந்தாலும், அரசிடம் இதற்கான பதில் இல்லை. இவ்வாறான நிலையில் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் பணத்தை பெற்றுக்கொண்டு வெளிநாடு முழுவதும் விஜயங்களை மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ரணசிங்க பிரேமதாசவின் 200 ஆடைத் தொழிற்சாலைகள் வேலைத்திட்டத்தின் பின்னர், நாட்டுக்கு டொலர்களைப் பெற்றுக்கொள்ளும் உள்நாட்டு சர்வதேச அளவிலும் இன்னும் எந்தத் திட்டமும் அறிமுகப்படுத்தப்படவில்லை. இவ்வாறு போகும் போக்கில் சர்வதேச நாணய நிதியத்துடன் 100 உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டாலும் டொலர்களைப் பெற்றுக் கொள்ள முடியாது போகும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எமது நாட்டால் மின் உற்ப்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியவில்லை. அரசாங்கம் எவ்வளவு தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், அரசாங்கம் எப்போதும் மக்கள் மீது சுமைகளை ஏற்றி ஆட்சியாளர்கள் மனிதாபிமானமற்ற வாழ்க்கையை முன்னெடுத்து வருகின்றனர்.ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அதிநவீன மூலோபாய திட்டத்தின் மூலம் டொலர்களை கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்தப்படும்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத் திட்டத்தின் 117 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், ஹம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாராம, ஓயாஹவ, ராவணவெவ கனிஷ்ட கல்லூரிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் ஞாயிற்றுக்கிழமை (03)  கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். நடன மற்றும் அரங்கேற்றங்கள் குழுவுக்குத் தேவையான அணிகலன்களைப் பெற்றுக் கொள்ள ஒரு இலட்சம் ரூபா நன்கொடையும் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

வங்குரோத்து என்ற இந்த மரண வலையில் இருந்து வெளியேற பொருளாதார அபிவிருத்தி ஏற்பட வேண்டும். அதற்காக உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய நேரத்தில் அரசாங்கம் பொருளாதாரத்தை சுருக்கி வருகிறது. மின்கட்டண அதிகரிப்பால்  புதிய முதலீட்டாளர்கள் நாட்டிற்கு வரமாட்டார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான் ஜனாதிபதியின் விஜயத்தை முன்னிட்டு தலைநகரில்...

2024-04-23 15:09:52
news-image

பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

2024-04-23 16:22:01
news-image

யாழில் லொறியும் முச்சக்கர வண்டியும் கோர...

2024-04-23 15:15:39
news-image

உலக புத்தக தினம் இன்று

2024-04-23 15:22:07
news-image

ரயிலிலிருந்து தவறி வீழ்ந்து வெளிநாட்டுப் பெண்...

2024-04-23 14:13:24
news-image

சிவனொளிபாத மலை யாத்திரீகர்களின் செயற்பாட்டால் சுற்றாடல்...

2024-04-23 12:46:53
news-image

தியத்தலாவை கார் பந்தய விபத்து :...

2024-04-23 12:19:27
news-image

வறட்சியான வானிலையால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின்...

2024-04-23 14:11:33
news-image

ஏமாற வேண்டாம் ! 8 நிறுவனங்களின்...

2024-04-23 11:58:01
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 720 பெண்கள் உட்பட...

2024-04-23 11:47:46
news-image

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள்...

2024-04-23 11:44:57
news-image

இணையவழி மூலம் கடன் பெற்று தருவதாகக்...

2024-04-23 11:50:25