ஐஸ் போதைப்பொருளை சொக்லேட்டில் மறைத்து கடத்தல்:  விசாரணைகளின்போது சந்தேக நபர் வெளியிட்ட தகவல்கள்!

Published By: Vishnu

03 Mar, 2024 | 06:46 PM
image

ஐஸ் போதைப்பொருளை சொக்லேட்டில் மறைத்து வைத்து கட்டுநாயக்க விமான நிலையம்  ஊடாக நீண்ட காலமாக நாட்டுக்குள்  கடத்தியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்தக் கடத்தல் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிரிபத்கொட பகுதியில் சொகுசு காரொன்றை சோதனையிட்டபோது, சொக்லேட் ரேப்பர்களில் பொதி செய்யப்பட்ட சுமார் 5 கிலோ போதைப்பொருள் ஐஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தக் கடத்தில் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின்போது, கடத்தல்காரர் ஒருவருக்கு சொந்தமான வத்தளை மற்றும் கணேமுல வீடுகள் தொடர்பிலான தகவல்களும் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்துள்ளன. 

தற்போது துபாயில் பதுங்கியிருக்கும் சக்தி வாய்ந்த போதைப்பொருள் வியாபாரிகளான நிபுன மற்றும் நந்தசேன ஆகியோரின் அறிவுறுத்தலிலேயே  இவ்வாறு போதைப்பொருள்ள கடத்தப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்