சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலானது இலங்கைக்கு சொந்தமானதல்லவெனவும் அதில் பணியாற்றும் பணியாளர்கள் 8 பேரும் இலங்கையர்கள் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கையின் தேசியக் கொடியுடன் சென்றுகொண்டிருந்த எரிபொருள் தாங்கிக் கப்பலான அரிஸ் 13 என்ற கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக சர்வதேச செய்திகள் வெளியாகியிருந்த நிலையிலேயே இலங்கை கடற்படை மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.