(நா.தனுஜா)
இலங்கையிலும், குறிப்பாக கொழும்பு துறைமுக நகரத்திலும் முதலீடுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் குறித்து இலங்கை முதலீட்டுச் சபை மற்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் தலைவருக்கும் பிரிட்டனின் பல்துறைசார் பிரதிநிதிகளுக்கும் இடையில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இலங்கை முதலீட்டுச் சபை மற்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் தலைவர் தினேஷ் வீரக்கொடி கடந்த மாத இறுதியில் பிரிட்டனுக்கு விஜயம் மேற்கொண்டு, அங்கு வர்த்தகம் மற்றும் முதலீட்டுத்துறைசார் முக்கிய சந்திப்புக்களில் ஈடுபட்டிருந்தார். இலங்கை - பிரிட்டனுக்கு இடையிலான பொருளாதாரத் தொடர்புகளை வலுப்படுத்தல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு வாய்ப்புக்களை அடையாளம் காணல் என்பவற்றை இலக்காகக் கொண்ட இச்சந்திப்புக்கள் கடந்த மாதம் 24ஆம் திகதி பிரிட்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை இல்லம் ஆகியவற்றில் நடைபெற்றது.
இங்கு இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவருடன் இணைந்து இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகமவும் பல்வேறு துறைசார் பிரதிநிதிகளைச் சந்தித்ததுடன், ஒன்றிணைந்து பணியாற்றல் மற்றும் முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடினார்.
இச்சந்திப்புக்களில் ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கி, வேர்த்துஸா கோப்பரேஷன், பிரிட்டன் இலங்கை வங்கி, பிரிட்டன் வீட்டுப் பராமரிப்பு சேவை, டோவர் மரினா ஹோட்டல் மற்றும் ஸ்பா, பிரிட்டன் கார்பன் ட்ரக்கர் போன்ற முன்னணி கட்டமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இலங்கைக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்களை விரிவுபடுத்தல் மற்றும் முதலீடுகளை ஊக்குவித்தல் என்பனவே இக்கலந்துரையாடல்களின் பிரதான நோக்கமாக அமைந்திருந்தன. அதிலும் குறிப்பாக கொழும்பு துறைமுக நகரத்துக்குள் நிதியியல்துறை மற்றும் வங்கிக் கட்டமைப்பு ஆகியவற்றை விஸ்தரித்தல், இலங்கையில் அரசுக்குச் சொந்தமான துறைகளில் உள்ள முதலீட்டு வாய்ப்புக்களை ஆராய்தல், செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றை மேம்படுத்தல் என்பன பற்றி விசேட கவனம் செலுத்தப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM