(நா.தனுஜா)
இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொண்ட முதலாவது அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் என்ற ரீதியில் தமிழ் சமூகத்துக்கான நீதி, சமாதானம் மற்றும் சுபீட்சமான எதிர்காலம் ஆகியவற்றை முன்னிறுத்தி தொடர்ந்து இயங்கத் தயாராக இருப்பதாக விலி நிக்கேல் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இன மற்றும் மத சுதந்திரம் தொடர்பான காங்கிரஸ் குழுக் கூட்டத்துக்கு இணை தலைமைதாங்குவதற்கு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் விலி நிக்கேலின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.
அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடைபெறக்கூடிய இலங்கையில் இன மற்றும் மத சுதந்திரம் தொடர்பான காங்கிரஸ் குழுக் கூட்டத்தில் இலங்கையில் வாழும் அனைத்து இனங்களினதும், குறிப்பாக ஈழத்தமிழ் சமூகத்தின் சிவில் மற்றும் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் விரிவாக ஆராயப்படும்.
அதன்படி, இதற்கு இணைத் தலைமையேற்றுள்ள விலி நிக்கேல், இலங்கையில் இன மற்றும் மத சுதந்திரம் தொடர்பான காங்கிரஸ் குழுக் கூட்டத்துக்கு இணைத் தலைமைதாங்குவது குறித்து மிகுந்த பெருமிதமடைவதாகத் தெரிவித்துள்ளார்.
அதுமாத்திரமன்றி 'இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொண்ட முதலாவது அமெரிக்க கொள்கை வகுப்பாளர் என்ற ரீதியிலும், வட கரோலினா மற்றும் இலங்கையில் வாழும் தமிழ் சமூகத்தின் வலுவான ஆதரவாளன் என்ற அடிப்படையிலும் தமிழ் சமூகத்துக்கான நீதி, சமாதானம் மற்றும் சுபீட்சமான எதிர்காலம் ஆகியவற்றை முன்னிறுத்தி தொடர்ந்து இயங்குவேன்' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM