அதிவிரைவாக வளர்ச்சியடைந்துவரும் ஸ்மார்ட்போன் என்ற சாதனையை Huawei படைத்துள்ளது

14 Mar, 2017 | 04:13 PM
image

2016 டிசம்பர் முடிவில் 30 வீதத்திற்கும் அதிகமான சந்தைப்பங்குடன் அதிவிரைவாக வளர்ச்சிகண்டு வருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநாமம் என்ற சாதனையை படைத்துள்ளது தொடர்பில் Huawei அறிவித்துள்ளது.

உலகளாவில் ஸ்மார்ட்போன் சந்தையில் தனது வர்த்தகநாமத்தின் தனித்துவத்தின் உந்துசக்தியுடன் அது வளர்ச்சி கண்டுவருகின்றது. 2017 ஆம் ஆண்டில் உலகிலுள்ள மிகவும் பெறுமதிவாய்ந்த வர்த்தகநாமங்கள் தொடர்பில் (Global 500), Brand Finance வெளியிட்டுள்ள பட்டியலில் 40 ஆவது ஸ்தானத்திற்கு Huawei முன்னேற்றம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மக்கள் மத்தியில் நற்பெயரை வென்றெடுத்துள்ள சிங்கர் ஸ்ரீ லங்கா நிறுவனத்துடன் பங்குடமையொன்றை Huawei ஏற்படுத்தியிருந்தது. 2012 ஆம் ஆண்டில் தனது தொழிற்பாடுகளை முதன்முதலாக ஆரம்பித்த Huawei வர்த்தகநாமமானது, சிங்கர் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் வழிகாட்டலுடன் தனது வர்த்தகநாமத்தின் நற்பெயரை வெற்றிகரமாகக் கட்டியெழுப்பியுள்ளது.

பயனர் அனுபவம் தொடர்பான ஆராய்ச்சி நிபுணத்துவ அமைப்பான GfK வெளியிட்டுள்ள சமீபத்தைய ஆய்வறிக்கையில் 2016 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 30 வீதத்திற்கும் அதிகமான சந்தைப்பங்கினை Huawei கைப்பற்றியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் Huawei சாதனங்களுக்கான உள்நாட்டு முகாமையாளரான ஹென்றி லியு,

“2012 ஆம் ஆண்டில் இலங்கையில் ஸ்மார்ட்போன் சந்தையில் கால்பதித்திருந்த Huawei, நாட்டில் எமது பிரத்தியேகமான விநியோகத்தரான சிங்கர் ஸ்ரீ லங்கா நிறுவனத்துடனான திறன்மிக்க பங்குடமையின் துணையுடன் பெரு வளர்ச்சி கண்டுள்ளது.

நாட்டில் தனது போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் புத்தாக்கம் மிக்க, புரட்சிகரமான, சிக்கனமான மற்றும் நம்பகமான ஸ்மார்ட்போன் வர்த்தகநாமங்களில் ஒன்றாக தன்னை நிலைநிறுத்தி, உள்நாட்டில் ஸ்மார்ட்போன் ஆர்வலர்களை வெகு விரைவாக தன்பால் ஈர்த்துக்கொண்டுள்ளது.

இலங்கைக்கு மிகச் சிறந்த உற்பத்திகளை வழங்கவேண்டும் என்பதில் நாம் கவனம் செலுத்தியுள்ள நிலையில் Huawei இனை இந்த மட்டத்திற்கு வளர்ச்சி காண்பதற்கு சிங்கர் ஸ்ரீ லங்கா நிறுவனம் ஆற்றியுள்ள பங்களிப்புக்களை நாம் போற்றுகின்றோம். 2017 ஆம் ஆண்டில் இந்த நாட்டில் முதலிடத்தில் திகழுகின்ற வர்த்தகநாமமாக மாறவேண்டும் என்ற பயணத்தை நாம் ஆரம்பித்துள்ள நிலையில் இந்த ஆண்டு எங்களுக்கும் Huawei ஆர்வலர்கள் அனைவருக்கும் மிகுந்த ஆர்வமூட்டும் ஒரு ஆண்டாக அமையவுள்ளது.” என்று குறிப்பிட்டார்.

தனது தீவிரமான விற்பனை பிரசாரங்களுக்கு இணையாக, பம்பலப்பட்டி, அனுராதபுரம், காலி மற்றும் யாழ்ப்பாணம் போன்ற முக்கியமான இடங்களில் சேவை மையங்களை நிறுவியுள்ள Huawei, நாடெங்கிலும் அவற்றை விஸ்தரித்துள்ளது.

இலங்கையில் தொடர்ச்சியாக வளர்ச்சி கண்டுவருகின்ற தனது வாடிக்கையாளர் தளத்திற்கு வழங்கும் சேவைகளை மேம்படுத்தும் வகையில், மாத்தறை, மட்டக்களப்பு, பதுளை மற்றும் களுத்துறை ஆகிய இடங்களிலும் தனது சேவை மையங்களை நிறுவும் திட்டங்களை Huawei தற்போது முன்னெடுத்து வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்பள்ளி கல்வியை மேம்படுத்த UNICEFஉடன் இணையும்...

2025-02-06 10:13:01
news-image

விலை உறுதிப்பாடு : தவிர்க்க முடியாததொன்றா?

2025-02-05 18:33:08
news-image

கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்

2025-02-05 17:22:13
news-image

இலங்கையின் "சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்" கெசினோ ...

2025-02-05 17:05:26
news-image

சம்பத் வங்கி மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ்...

2025-02-05 11:44:52
news-image

TAGS விருதுகள் 2024 – Prime...

2025-02-05 11:41:48
news-image

வடபிராந்திய முயற்சியாண்மைகளை வலுப்படுத்த டேவிட் பீரிஸ்...

2025-02-03 14:56:40
news-image

‘C'est La Vie’– பிரான்ஸ் நாட்டின்...

2025-02-02 09:41:53
news-image

இலங்கையின் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாக...

2025-01-30 12:16:32
news-image

VIMAN வீதி கிரிக்கெட் போட்டியை வழிநடத்துவதற்காக ...

2025-01-30 11:55:21
news-image

எயிற்கின் ஸ்பென்ஸ் ட்ரவல்ஸ் அதன் பயணச்...

2025-01-29 15:21:43
news-image

30 ஆண்டு நம்பிக்கையைக் கொண்டாடும் Maliban...

2025-01-29 10:01:31