மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட உள்ள 195 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் அறிவிப்பு.
மக்களவைத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயராகி வரும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சியினர் இறங்கியுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக பாஜக சார்பில் நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் களம் இறங்க உள்ள அக்கட்சியின் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் இன்று (02.03.2024) வெளியிடப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பட்டியலை பாஜக தேசியப் பொதுச் செயலாளர் வினோத் தவ்டே வெளியிட்டார்.
அதன்படி அறிவிக்கப்பட்டுள்ள 195 பேர் அடங்கியுள்ள முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில்
பெண் வேட்பாளர்கள் – 28 பேர்
இளைஞர்கள் – 47 பேர்
பட்டியலினத்தை சேர்ந்த வேட்பாளர்கள் – 27 பேர்
பழங்குடியினத்தை சேர்ந்தோர் – 17 பேர்
பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தோர் – 57 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் மாநில வாரியாக பார்த்தால்,
மேற்குவங்கம் – 20 தொகுதிகள்
மத்தியப்பிரதேசம் – 24 தொகுதிகள்
குஜராத் – 15 தொகுதிகள்
ராஜஸ்தான் – 15 தொகுதிகள்
கேரளா – 12 தொகுதிகள்
தெலங்கானா – 9 தொகுதிகள்
அசாம் – 11 தொகுதிகள்
ஜார்கண்ட் – 11 தொகுதிகள்
சத்தீஸ்கர் – 11 தொகுதிகள்
டெல்லி – 5 தொகுதிகள்
உத்தரகண்ட் – 3 தொகுதிகள்
அருணாச்சல பிரதேசம் – 2 தொகுதிகள்
கோவா – 1 தொகுதி
என மாநிலவாரியாக அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பல நட்சத்திர வேட்பாளர்களும், தற்போதைய அமைச்சர்களும், முன்னாள் முதல்மைச்சர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. முக்கியமாக பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM