செங்கடலில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் சேதமடைந்த கப்பல் மூழ்கிவிட்டது - அமெரிக்கா தகவல்

Published By: Rajeeban

03 Mar, 2024 | 10:40 AM
image

சில வாரங்களுக்கு முன்னர்செங்கடல் பகுதியில்  ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலிற்கு உள்ளான ருபிமர் என்ற கப்பல் பலத்த சேதங்கள் காரணமாக கடலில் மூழ்கியுள்ளது.

ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் காரணமாக முற்றாக அழிக்கப்பட்ட முதலாவது கப்பல் இதுவென்பதுகுறிப்பிடத்தக்கது.

ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் காரணமாக ஆசியா மத்திய கிழக்கிலிருந்து ஐரோப்பாவிற்கான சரக்கு மற்றும் எரிபொருள் கப்பல்கள்  செங்கடல் ஊடாக பயணம் செய்வது பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

பல கப்பல்கள் இந்த கடற்பாதையை பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளன.

இந்த நிலையில் ருபிமார் கப்பல் மூழ்கியுள்ளமை குறிப்பிட்ட பகுதியில் பயணிக்கும் கப்பல்களின் காப்புறுதி கட்டண அதிகரிப்பிற்கு வழிவகுக்கலாம் என  அச்சம் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக சர்வதேச அளவில் பணவீக்கம் அதிகரிக்கலாம் மத்திய கிழக்கிற்கு மனிதாபிமான உதவிகளுடன் கப்பல்கள் செல்வது பாதிக்கப்படலாம்.

மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பலின் படத்தை வெளியிட்டுள்ள அமெரிக்கா இதன் காரணமாக சூழல் பாதிப்புகள் ஏற்படலாம் என தெரிவித்துள்ளது.

கப்பலில் 21000 மெட்ரிக் தொன் பெறுமதியான  அமோனியம் பொஸ்பேட் உரங்கள் காணப்பட்டன இதனால் செங்கடல் பகுதிக் பாதிப்புகள் ஏற்படலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்க மெக்சிக்கோ எல்லையில் அவசரகாலநிலை-குடியேற்றவாசிகள் நாடு...

2025-01-20 23:09:44
news-image

எனது உயிர் ஒரு நோக்கத்திற்காகவே காப்பாற்றப்பட்டது-...

2025-01-20 23:01:43
news-image

அமெரிக்காவின் பொற்காலம் உதயம் - ஜனாதிபதியாக...

2025-01-20 22:54:22
news-image

அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக பதவியேற்றார்...

2025-01-20 22:45:39
news-image

பதவியேற்பதற்காக ரொட்டுன்டா வந்தார் டிரம்ப்

2025-01-20 22:26:20
news-image

டிரம்பின் பதவியேற்பு நிகழ்வில் அமெரிக்க முன்னாள்...

2025-01-20 22:19:13
news-image

ஜனாதிபதியாக பதவியேற்றதும் டிரம்ப் அமெரிக்க மெக்சிக்கோ...

2025-01-20 21:21:16
news-image

நிம்மதியாக உறங்கினோம் "; - யுத்தமற்ற...

2025-01-20 17:08:07
news-image

கொல்கத்தா பெண்மருத்துவர் கொலை வழக்கு –...

2025-01-20 15:45:05
news-image

பொதுமக்கள் மீது காரை மோதி35 பேரை...

2025-01-20 15:07:49
news-image

காதலனை கொன்ற கேரள பெண்ணுக்கு மரண...

2025-01-20 13:02:59
news-image

'நாளை சூரியன் அஸ்தமிக்கும்போது எங்கள் தேசத்தின்...

2025-01-20 12:00:29