சர்வதேச கடற்பரப்பில் கடல்சார் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கான நடவடிக்கைக்கு இலங்கை தனது இரண்டாவது கப்பலை அனுப்பவுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
முதலாவது கப்பல் தனது நடவடிக்கையினை பூர்த்திசெய்த பின்னர் இரண்டு நாட்களிற்கு முன்னர் இலங்கை திரும்பியுள்ளது என கடற்படையின் ஊடக இயக்குநர் கப்டன் தயான் விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.
இலங்கை எஸ்எம்எஸ் கஜபா என்ற கப்பலை 100 கடற்படையினருடன் அனுப்பியது என தெரிவிதுள்ள அவர் சரக்கு மற்றும் மீன்பிடி கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இலங்கை இந்த கப்பலை அனுப்பியது இணைந்த கடல்சார் படையணியுடன் சேர்ந்து செயற்பட்டு இந்து சமுத்திரத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதும் நோக்கமாகயிருந்தது என தெரிவித்துள்ளார்.
அராபியன் கடல் கடற்கொள்ளைகள் அதிகமாக இடம்பெறும் பகுதி என தெரிவித்துள்ள அவர் சரக்கு மற்றும் மீன்பிடி கப்பல்களின் நடமாட்ட சுதந்திரத்தை உறுதி செய்வதற்காக இலங்கை கடற்படை கப்பல்களை அனுப்புகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கடற்படை நடவடிக்கைக்கு இரண்டாவது கப்பலை அனுப்புவதற்கு இலங்கை தயாராகிவருகின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் எனினும் மேலதிக தகவல்களை வெளியிட முடியாது என தெரிவித்துள்ளார்.
செங்கடல் பகுதிக்கு கப்பல்களை இலங்கை அனுப்பவுள்ளதாக ஜனாதிபதி இரண்டு தடவை தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை இலங்கை கடற்படை தளத்தில் இடம்பெற்ற கடற்படையின் நிகழ்விலும் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
செங்கடலின் பாதுகாப்பிற்காக எங்களின் கடற்படை கப்பல்களை அனுப்பதிட்டமிட்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM