முல்லைத்தீவில் இருந்து திருக்கேதீச்சரம் நோக்கி ஆன்மிக அறவழிப் பயணம்

02 Mar, 2024 | 11:40 PM
image

எதிர்வரும் சிவராத்திரி நன்னாளில் திருக்கேதீச்சரத்தை அடையும் வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு  மூங்கிலாறு கிராமத்தில் உள்ள சிவாலயத்தில் இருந்து  ஆன்மீக  பாதயாத்திரை ஒன்று  ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்த பாதயாத்திரையில் அனைவரும் பங்குபற்றி எம்பெருமானின் ஆசிகளை பெற்றுக்கொள்ளுமாறு ஏற்ப்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

வாழ்க்கை பாதையில் தடுமாறுபவர்கள், வாழும் வழியகன்று தடுமாறி நிற்பவர்கள், செல்வம் விலகி நின்று வருந்துபவர்கள் சிவாலயம் நோக்கி யாத்திரை சென்றால் நல்வழி கிடைக்கும் என்பது நல்லோர் வாக்கு... இந்த ஜென்மத்தில் செய்த பாவங்களை மட்டுமல்லாமல் முன்ஜென்ம பாவங்களையும் பாத யாத்திரை செய்வதால் உண்டாகும் புண்ணியம் நீக்கிவிடும் என்பர்.

எம் அனைவரது பாதங்களும் கேதீச்சரத்தை நோக்கி நடக்கட்டும். எம் பாவங்களும், ஜென்மங்களால் உண்டான சாபங்களும் நீங்கி வாழ்க்கை வளம் பெறட்டும் என்று இந்த பாத யாத்திரையில் இணைந்துகொள்ள ஆர்வமுள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

மேலதிக தகவல்களுக்கு 0770489305, 0774675795 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்பாட்டாளர்கள் குறித்த  யாத்திரை தொடர்பான கால அட்டவணையும் அறியத்தந்துள்ளனர். சில வேளைகளில் சிறிய மாறுதல்கள் ஏற்படலாம் எனவும் அதற்கமைய 04.03.2024 திங்கட்கிழமை மாலை 3.30 மணிக்கு மூங்கிலாறு சிவன் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகும் இந்த ஆன்மீக யாத்திரை இரவு பரந்தனில் ஓய்வு 05.03.2024 காலை 5.00 பரந்தனில் இருந்து புறப்பட்டு மதியம் முறிகண்டி பிள்ளையார் கோயிலை அடைதல். மதிய உணவு மாலை யாத்திரையைத் தொடர்ந்து  வன்னேரியை அடைந்து அங்கே தங்குதல்.

06.03.2024 காலை 5.00 மணிக்கு வன்னேரியில் இருந்து புறப்பட்டு மதியம் முழங்காவிலை அடைதல் மதிய உணவு பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு  இலுப்பைக்கடவையில் இரவு தங்குதல்

07.03.2024 காலை இலுப்பைக்கடவையில் இருந்து 5.00 மணிக்கு திருக்கேதீச்சரம்  நோக்கிப் புறப்பட்டு இரவு கோயிலை அடைதல்.என குறிதத யாத்திரை இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08
news-image

திருக்கோணேஸ்வரம் அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை...

2024-04-09 14:10:46
news-image

USKU அமைப்பின் சர்வதேச பொதுக்கூட்டம் 2024

2024-04-09 12:56:17