அரசியல், தத்துவ அல்லது சமயங்களைப் பிரதிபலிக்கும் சின்னங்களை அணியும் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கும் உரிமை நிர்வாகத்துக்கு உண்டு என ஐரோப்பாவின் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்கீழ், முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா உட்பட எந்தவித சமயச் சின்னங்களையும் அணிவதைத் தடுக்கும் அதிகாரம் நிர்வாகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த விதியை குறித்த நிறுவனங்கள் தமது பொது விதியாக வகுக்க வேண்டும் என்றும், வாடிக்கையாளரின் விருப்பத்திற்கிணங்க வாய்மூலக் கட்டளையாக இவ்விதிகளை விதிக்க முடியாது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்றதொரு உத்தரவை ஐரோப்பிய உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருப்பது இதுவே முதன்முறை. பெல்ஜியத்தில், பர்தா அணிந்த ஒரு முஸ்லிம் பெண் வரவேற்பாளர் வேலை நீக்கம் செய்யப்பட்டதையடுத்து அவர் தொடுத்த வழக்கினால் ஏற்பட்ட சர்ச்சையையடுத்தே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.