(நெவில் அன்தனி)
பங்களாதேஷுக்கு எதிராக திங்கட்கிழமை (04) ஆரம்பமாகவுள்ள சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டிருந்த குசல் ஜனித் பேரேரா அத் தொடரில் பங்குபற்ற மாட்டார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெள்ளிக்கிழமை (01) மாலை அறிவித்தது.
குசல் ஜனித் பெரேராவுக்கு சுவாச தொற்று ஏற்பட்டுள்ளதால் அவர் பங்களாதேஷ் செல்லவில்லை.
அவருக்கு பதிலாக நிரோஷன் திக்வெல்லவை குழாத்தில் தெரிவுக் குழு இணைத்துள்ளது.
பங்களாதேஷில் இலங்கை குழாத்துடன் சனிக்கிழமை (02) நிரோஷன் திக்வெல்ல இணைந்துகொள்வார் என அறிவிக்கப்படுகிறது.
பிரதான கழகங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் நிரோஷன் திக்வெல்ல துடுப்பாட்டத்திலும் விக்கெட்காப்பிலும் திறமையை வெளிப்படுத்தியதை அடுத்து அவருக்கு இலங்கை குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சுமார் 3 வருடங்களுக்குப் பின்னர் அவர் சர்வதேச ரி20 கிரிக்கெட் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக சவுத்ஹாம்ப்டனில் 2021 ஜூன் மாதம் நடைபெற்ற சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரிலேயே கடைசியாக அவர் விளையாடி இருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM