நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது சாந்தனின் பூதவுடல்; நீர்கொழும்பில் பிரேத பரிசோதனை

Published By: Vishnu

01 Mar, 2024 | 07:56 PM
image

ஆர்.ராம்

55 வயதான தில்லையம்பலம் சுதேந்திரராஜா என்ற இயற்பெயரைக் கொண்ட சாந்தன் கல்லீரல் செயலிழப்பால் மரணமடைந்த நிலையில் அவரது பூதவுடல் வெள்ளிக்கிழமை (1) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரது பூதவுடன் நீண்ட நேர தமதத்துக்குப் பின்னர் கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து பெறப்பட்ட நிலையில் உடலம் மீதான பிரேத பரிசோதனைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதால்  பிரேத பரிசோதனைக்காக நீர் கொழும்பு வைத்தியசாலையில் உடலம் கையளிக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனையின் பின்னராக உடலத்தை கையேற்றப் பின்னராக யாழ்ப்பாணம் நோக்கி கொண்டு செல்லப்படவுள்ளதாக அவரது உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

சாந்தன் கடந்த 28ஆம் திகதி சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில்  சிகிச்சைகள் பலனின்றி மரணமடைந்திருந்த நிலையில் அவரது பூதவுடல் வெள்ளிக்கிழமை (1) விமானம் மூலம் சென்னையில் இருந்து கட்டுநாயக்கவுக்கு கொண்டுவரப்பட்டது.

இதேவேளை, அவரது உடலம் யாழ்ப்பாணத்துக்கு கொண்டு சென்றதன் பின்னர் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக் கிரியைகள் அவரது உடுப்பிட்டியில் உள்ள இல்லத்தில் நடைபெறவுள்ளது.

விசேட அஞ்சலிகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியமும், முன்னாள்போராளிகளின் நலன்புரிச்சங்கமும் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய வளாகத்திற்கு மாற்றப்படும் வெளிவிவகார அமைச்சின்...

2024-04-23 16:27:31
news-image

ஈரான் ஜனாதிபதியின் விஜயத்தை முன்னிட்டு தலைநகரில்...

2024-04-23 15:09:52
news-image

பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

2024-04-23 16:22:01
news-image

யாழில் லொறியும் முச்சக்கர வண்டியும் கோர...

2024-04-23 15:15:39
news-image

உலக புத்தக தினம் இன்று

2024-04-23 15:22:07
news-image

ரயிலிலிருந்து தவறி வீழ்ந்து வெளிநாட்டுப் பெண்...

2024-04-23 14:13:24
news-image

சிவனொளிபாத மலை யாத்திரீகர்களின் செயற்பாட்டால் சுற்றாடல்...

2024-04-23 12:46:53
news-image

தியத்தலாவை கார் பந்தய விபத்து :...

2024-04-23 12:19:27
news-image

வறட்சியான வானிலையால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின்...

2024-04-23 14:11:33
news-image

ஏமாற வேண்டாம் ! 8 நிறுவனங்களின்...

2024-04-23 11:58:01
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 720 பெண்கள் உட்பட...

2024-04-23 11:47:46
news-image

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள்...

2024-04-23 11:44:57