மாணவர் மத்தியில் கடற்புல்லின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் யா/அராலி சரஸ்வதி இந்து கல்லூரியில் தரம் 10, 11இல் நீருயிரின வளத் தொழில்நுட்பவியல் பாடம் கற்கும் மாணவர்களிடையே கடற்புல் தொடர்பான அறிவுக் களஞ்சியப் போட்டி நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் சர்வதேச கடற்புல் தினமான இன்று (மார்ச் 01) வழங்கப்பட்டது.
இந்நிகழ்வு கல்லூரியின் பிரதான மண்டபத்தில் அதிபர் கு.பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது.
இதில் பிரதம விருந்தினராக கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் பிராந்திய பொறியியலாளர் எந்திரி ஜீ.தர்சன் கலந்துகொண்டார்.
அத்துடன், Clean Ocean Force அமைப்பின் வட மாகாண பிரதிநிதி ம.சசிகரன், வலிகாமம் கல்வி வலய தொழில்நுட்ப பாட ஆசிரிய ஆலோசகர் ப.அருந்தவம் மற்றும் நாடகமும் அரங்கியலும் பாட ஆசிரிய ஆலோசகர் விஜயநாதன் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
அராலி இந்து கல்லூரி நீருயிரின வளத் தொழில்நுட்ப கழகம் இந்நிகழ்வை ஒழுங்குபடுத்தியிருந்தது. Clean Ocean Force அமைப்பு இதற்கான அனுசரணையை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM