இன்றைய திகதியில் எம்மில் பலருக்கும் சோம்பல், மலச்சிக்கல், சிறுநீரக பாதிப்பு போன்றவை ஏற்படுகிறது. அவர்களும் வைத்தியசாலைக்குச் சென்று மருத்துவர்களை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெறுகிறார்கள். இவர்களின் சிலருக்கு ஹைபர்கால்சீமியா எனும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஹைபர்கால்சீமியா என்றால் என்ன?
எம்முடைய குருதியில் இயல்பான அளவில் இருக்க வேண்டிய கல்சிய சத்தின் அளவு... இயல்பான அளவை விட கூடுதலாக இருந்தால் அதனை ஹைபர்கால்சீமியா என குறிப்பிடுகிறார்கள்.
இதனால் என்ன பாதிப்பு ஏற்படும்?
இவை உங்களுடைய எலும்புகளின் வலிமையை குறைக்கும். சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கும். சிலருக்கு இதயம் மற்றும் மூளை ஆகிய உறுப்புகளின் செயல் திறனில் பாரிய பின்னடைவை உண்டாக்கும்.
பாதிப்பிற்குரிய காரணங்கள்
எம்முடைய கழுத்தில் உள்ள தைரொய்ட் சுரப்பிக்கு அருகே இருக்கும் நான்கு சிறிய அளவிலான பாரா தைரொய்ட் சுரப்பிகள் தங்களுடைய பணியில் சம சீரற்ற நிலையில் இயங்கினால் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். மேலும் புற்றுநோய், விற்றமின் டி சத்துக்காக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளின் பக்க விளைவு மற்றும் வேறு சில மருத்துவ குறைபாடுகளுக்காக எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் பக்க விளைவு ஆகியவற்றின் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும்.
அறிகுறிகள்
ஹைபர்கால்சீமியாவின் பாதிப்பு மிதமாகவும், மிகத் தீவிரமானதாகவும் இருக்கும். மேலும் அவை எந்த உறுப்பில் ஏற்பட்டிருக்கிறது என்பதனை பொருத்து.. அறிகுறிகளை வெளிப்படுத்தும். சிறுநீரகங்கள் என்றால் அதிக தாகத்தையும், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலையையும் உண்டாக்கும். செரிமான மண்டலத்தில் இதன் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது எனில், மலச்சிக்கல், வயிற்று வலி, குமட்டல், வாந்தி ஆகிய அறிகுறிகளை ஏற்படுத்தும். இதன் பாதிப்பு எலும்பில் ஏற்பட்டிருக்கிறது என்றால், எலும்பு வலி மற்றும் தசை பலவீனத்தால் உண்டாகும் வலி ஆகியவை அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம். மேலும் சிலருக்கு இதயம் மற்றும் மூளை பகுதியில் இதன் பாதிப்பு ஏற்பட்டால் சோர்வு, சோம்பல், மனச்சோர்வு, குழப்பம், சமசீரற்ற இதயத்துடிப்பு, படபடப்பு, மயக்கம், தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகளை உண்டாக்கும்.
கண்டறிதல்
எக்ஸ்ரே பரிசோதனை, பிரத்யேக குருதி பரிசோதனை, சிடி ஸ்கேன் பரிசோதனை மூலம் இதன் பாதிப்பின் தீவிரத்தை துல்லியமாக அவதானிக்கலாம்.
சிகிச்சை
இதன்போது மருத்துவர்கள் தற்போதைய சூழலில் நவீன மருத்துவ தொழில் நுட்பங்களால் மேம்படுத்தப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகளை வழங்கி முதன்மையான நிவாரணத்தை வழங்குகிறார்கள். வெகு சிலருக்கு மட்டும் பாரா தைரொய்ட் சுரப்பிகளை அகற்ற வேண்டியிருந்தால்.., அதற்கான பிரத்யேக பரிசோதனைகளை மேற்கொண்ட பிறகு அதற்குரிய சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டு நிவாரணத்தை அளிப்பர். வேறு சிலருக்கு இதன் போது அதிர்வலை சிகிச்சையின் மூலம் பாரா தைரொய்ட் சுரப்பியின் செயல்பாட்டினை சீராக்குகிறார்கள்.
- வைத்தியர் வேணுகோபால்
தொகுப்பு அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM