ரசிகர்களை கோபமூட்டிய ரொனால்டோவுக்கு ஒரு போட்டித்தடை, 30,000 ரியால்கள் அபராதம்

01 Mar, 2024 | 05:22 PM
image

(நெவில் அன்தனி)

அல்-ஷபாப் அணிக்கு எதிரான சவுதி புரோ லீக் போட்டியில் ஈட்டிய வெற்றியைத் தொடர்ந்து ரசிகர்களை கோபமூட்டிய அல்-நாஸ்ரின் முன்கள வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஒரு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரியாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அல்-நாஸ்ர் கழகத்துக்கு எதிரான போட்டியில்  2 - 3 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த பின்னர், அல் ஷபாப் ஆதரவாளர்கள் மெஸ்ஸி என கோஷமிட்டனர்.

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் நீண்டகால வைரி லியோனல் மெஸி ஆவார்.

மெஸியின் பெயரை ரசிகர்கள் சொல்லி கோஷமிட்டதும் போர்த்துக்கல் அணித் தலைவர் ரொனால்டோ (39 வயது) தனது காதுகளை கைகளால் மூடியவாறு ரசிகர்களுக்கு சைகை செய்தார்.

இதனை அடுத்து  இநத சம்பவம் குறித்து ஆராய்ந்த  சவுதி அரேபிய கால்பந்தாட்ட சம்மேளனம் அவருக்கு ஒரு போட்டித் தடையுடன் 30,000 சவுதி ரியால்களை அபராதமாக விதித்துள்ளது.

இந்த முடிவை எதிர்த்து ரொனால்டோ மேன்முறையீடு செய்ய முடியாது என சவுதி அரேபிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஒழுக்காற்று மற்றும் நெறிமுறைக் குழு தெரிவித்துள்ளது.

அல் - நாஸ்ர் கழகத்தின் முதலாவது கோலை 21ஆவது நிமிடத்தில் பெனல்டி மூலம் ரொனால்டோ போட்டார்.

அப் போட்டியில் இரண்டு தடவைகள் பின்னிலையில் இருந்தவாறு அல் ஷபாப் கோல் நிலையை சமப்படுத்தியது. எனினும் தாலிஸ்கா 87ஆவது நிமிடத்தில் போட்ட கோல் அல்-நாஸ்ர் கழகத்தின் வெற்றியை உறுதிசெய்தது.

மென்செஸ்டர் யுனைட்டட் கழகத்திலிருந்து 2022 டிசம்பரில் இலவசமாக இடமாற்றம் பெற்ற ரொனால்டோ, கால்பந்தாட்ட வரலாற்றில் மிகப் பெரிய சம்பளத்துக்காக அல்-நாஸ்ர் கழகத்தில் இணைந்ததாகக் கூறப்படுகிறது.

நடப்பு பருவ காலத்தில் 22 லீக் போட்டிகளில் ரொனால்டோ 20 கோல்களைப் போட்டுள்ளார்.

அவரது அல் நாஸ்ர் கழகம், அணிகள் நிலையில் அல் ஹிலாத் கழகத்துக்கு அடுத்ததாக இரண்டாவது     இடத்தில் இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46
news-image

இலங்கையில் ICC கிரிக்கெட் உரிமைகள் 2025...

2024-04-13 07:06:22