இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 3 ஆவது சட்ட மாநாடு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தொடர்ச்சியான நிபுணத்துவ மேம்பாட்டுக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்ட மாநாடு ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் நாளை 2 ஆம் திகதியும் நாளை மறுதினம் 3 ஆம் திகதியும் காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் நோர்த் கேட் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.
இந்த சட்ட மாநாட்டில் பிரதம விருந்தினராக உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.துரைராஜாவும் சிறப்பு விருந்தினராக உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
இந்த சட்ட மாநாட்டின் போது புகழ்பெற்ற வளவாளர்கள் சிலர் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.
இதன்போது பிணையில் விடுவிப்பது தொடர்பில் உள்ள புதிய சட்டஙகள் , தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்கள் , நீதிமன்ற நெறிமுறைகள், சிவில் நடைமுறைச் சட்டத்தின் புதிய திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளன.
மேலும் இந்த சட்ட மாநாட்டில் 150க்கும் மேற்பட்டவர்கள் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM