யாழ். புதிய பஸ் நிலைய போக்குவரத்து சேவை தொடர்பில் ஆராய ஐவர் அடங்கிய குழு நியமனம்

01 Mar, 2024 | 07:05 PM
image

யாழ்ப்பாணம் புதிய பஸ் நிலையத்திலிருந்து தூர பிரதேசங்களுக்கு போக்குவரத்து சேவையை மேற்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்கு வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் பணிப்புரைக்கமைய 5 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. 

வட மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேனவின் தலைமையில் இக்குழு இன்று (01) நியமிக்கப்பட்டது. 

யாழ்ப்பாணத்திலிருந்து தூர பிரதேசங்களுக்கு சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் உரிமையாளர்களின் கோரிக்கையின் பிரகாரம், நேற்று (29) நடைபெற்ற கூட்டத்தில் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து உரிய தீர்வுகளை வழங்குவதற்காக குழுவொன்று நியமிக்கப்படும் என ஆளுநர் அறிவித்தார்.

அதன்படி இன்று நியமிக்கப்பட்ட இக்குழுவின் ஊடாக யாழ். புதிய பஸ் நிலையத்திலிருந்து இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ்களை இணைந்த நேர அட்டவணைக்கமைய, தூர சேவைகளில் எவ்வாறு ஈடுபடுத்த முடியும் என்பது குறித்து ஆராயப்படவுள்ளது.

இந்த விடயம் தொடர்பான பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளை ஒரு வாரத்துக்குள் ஆளுநருக்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

400 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன்...

2025-03-20 09:30:26
news-image

பெரும்பாலான பகுதிகளில் மிதமான நிலையில் காற்றின்...

2025-03-20 09:37:05
news-image

தேசபந்து தென்னக்கோனின் பிணை மனு மீதான...

2025-03-20 09:09:57
news-image

ரயில் மோதி வாகனம் விபத்து ; ...

2025-03-20 09:14:32
news-image

வியாழேந்திரன் - பிள்ளையான் கூட்டு ;...

2025-03-20 08:58:08
news-image

உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க...

2025-03-20 08:40:17
news-image

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு...

2025-03-20 08:56:30
news-image

இன்றைய வானிலை

2025-03-20 06:14:11
news-image

தமிழ் இனப்படுகொலையை மறைக்க வேண்டாம்; பட்டலந்த...

2025-03-20 03:16:34
news-image

நான்கு மனித படுகொலைகளுடன் தொடர்புடைய  சந்தேகநபர்...

2025-03-20 03:06:26
news-image

அர்ச்சுனா எம்.பி குறித்த சபாநாயகரின் தீர்மானத்தை...

2025-03-20 02:55:15
news-image

கட்சியின் உள்ளக பிரச்சினைக்கு தீர்வு காண...

2025-03-20 02:51:31