ஜோஷ்வா இமைப்போல் காக்க - விமர்சனம்

01 Mar, 2024 | 02:29 PM
image

தயாரிப்பு : வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்

நடிகர்கள் : வருண், ராஹே, கிருஷ்ணா, மன்சூர் அலிகான், விசித்ரா மற்றும் பலர்.

இயக்கம் : கௌதம் வாசுதேவ் மேனன்

மதிப்பீடு : 3/5

காதல் திரைப்படங்களாக இருந்தாலும்... எக்சன் திரைப்படங்களாக இருந்தாலும்... அதனை தன்னுடைய பாணியில் ஸ்டைலிஷ்ஷான மேக்கிங்கில் அசத்தும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஜோஷ்வா இமைப்போல் காக்க'.. அவரது ரசிகர்களை கவர்ந்ததா? மற்றும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்கிறதா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

ஜோஷ்வா ( வருண்) - இந்தியாவில் பிறந்து லண்டனில் வளரும் சர்வதேச அளவிலான கொடூர கொலையாளி. இவர் இந்தியாவிற்கு சமீர் என்ற நபரை கொலை செய்வதற்காக வருகை தருகிறார். வந்த இடத்தில் குந்தவி (ராஹே)யை சந்திக்கிறார் முதல் சந்திப்பிலேயே அவரை காதலிக்க தொடங்குகிறார். குந்தவி - இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்து அங்கே சட்டத்தரணியாக பணியாற்றுகிறாள்.

ஒரு கருத்தரங்கில் பங்கு பற்றி பேசுவதற்காக அவர் இந்தியாவிற்கு வருகை தந்திருக்கிறார். இவர் அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவனான கொலம்பியாவை சேர்ந்த ஒருவருக்கு எதிராக வாதாடுகிறார். அந்த போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் சிறையில் இருந்தபடி தனக்கு எதிராக வாதாடும் குந்தவியை கொலை செய்தால்.. கோடி கணக்கிலான ரூபாயை தருவதாக அறிவித்து, சர்வதேச அளவிலும்.. இந்திய அளவிலும் பல கூலிப்படைகளை நியமிக்கிறார். இவர்கள் குந்தவியை கொலை செய்ய திட்டமிடுகிறார்கள்.

இந்நிலையில் குந்தவியை சந்திக்கும் ஜோஷ்வா.. அவளிடம் தன் கடந்த கால வாழ்க்கையை கூறிவிட்டு, உன்னை சந்தித்த முதல் பார்வையிலேயே காதலில் விழுந்து விட்டதாகவும், உனக்காக என் வாழ்க்கை பாதையை மாற்றிக்கொள்ள தயாராக இருப்பதாகவும், உன்னை ஆயுள் முழுவதும் இமைப்போல் காப்பதாகவும், என் காதலை ஏற்றுக் கொள்ளும்படியும் சொல்கிறார்.

ஜோஷ்வின் காதலை ஏற்றுக் கொள்வதா? வேண்டாமா? என்ற சலனத்தில் குந்தவி இருக்கிறாள். இந்நிலையில் குந்தவியின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்படும் குழுவில் ஜோஷ்வா இடம்பெறுகிறார். கூலிப்படைகளின் தொடர் தாக்குதலில் இருந்து அவர் குந்தவியை காப்பாற்றுகிறாரா? குந்தவி ஜோஷ்வாவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா? என்பது தான் இப்படத்தின் கதை.

இதுவரை சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் வருண்... முதன்முறையாக கதையின் நாயகனாகவும், எக்சன் கதாநாயகனாகவும் திரையில் தோன்றுகிறார். இதற்காக தன்னுடைய உடல் மொழியை திருத்தி அமைத்துக் கொண்டு நேர்த்தியாக நடித்திருக்கிறார். இதன் மூலம் வித்தியாசமான நடிகராக நம் மனதில் பதிகிறார் வருண். இவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது என்ற நம்பிக்கையும் ரசிகர்களின் மனதில் விதைக்கிறார்.

படத்தில் காதலை விட சண்டை காட்சிகள் ரசிகர்களிடத்தில் பேராதரவு கிடைக்கிறது. இதற்காக கடுமையாக உழைத்த சர்வதேச சண்டை பயிற்சி கலைஞர் / இயக்குநர் யானிக் பென் குழுவை தாராளமாக பாராட்டலாம்.

சண்டைக் காட்சிகள் இருந்தாலும் அதற்கான பின்னணியை அழுத்தமான திரைக்கதையுடன் உணர்வுபூர்வமாக இணைத்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனையும் மனதார பாராட்டலாம். 

குந்தவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ராஹே.. தொடக்கத்தில் ரசிகர்களின் மனதில் ஒட்டாதிருந்தாலும்.

காட்சிகளின் நகர்வின்போது தன்னுடைய நுட்பமான நடிப்பால் குந்தவியாகவே ரசிகர்களின் மனதில் பதிக்கிறார். உச்சகட்ட காட்சியில் அவர் எடுக்கும் முடிவு யூகிக்க கூடியதாக இருந்தாலும், அவரை அணைத்துக் கொண்டு வருண் பேசும் 'நா பார்த்துக்கிறேன்' என்ற வசனம் மூலம் ரசனைக்குரியதாக மாறுகிறது. இந்த மேஜிக்கை நிகழ்த்தியிருக்கும் இயக்குநரை பாராட்டலாம்.

ஜோஷ்வாவின் நண்பர் கோட்டி என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் கிருஷ்ணாவின் நடிப்பும் சூப்பர். அவர் மனம் தடுமாறும் காட்சிகளும், அதற்கான நடிப்பும் சபாஷ் பெறுகிறது.

மன்சூர் அலிகான், விசித்திரா, கிட்டி கிருஷ்ணமூர்த்தி, திவ்யதர்ஷினி ஆகியோரின் நடிப்பும் கவனம் பெறுகிறது.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய அவரது முந்தைய படங்களின் சாயல் இருந்தாலும், அப்படங்களின் திரைக்கதையில் இல்லாத அடர்த்தியும், வேகமும் இப்படத்தில் இருப்பதால்..  படத்தை கண்ணிமைக்காமல் பார்த்து ரசிக்க முடிகிறது.

எஸ். ஆர். கதிரின் ஒளிப்பதிவும், முதன்முதலாக இசையமைப்பாளர் அவதாரத்தை எடுத்திருக்கும் பின்னணி பாடகர் கார்த்திக்கின் பாடல்களும், பின்னணியிசையும் பாராட்டும்படி இருக்கிறது.

ஜோஷ்வா இமைப்போல் காக்க - கௌதம் வாசுதேவ் மேனனின் கிளாசிக்கலான எக்சன் டச்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35