தமிழ் திரையுலகில் நட்சத்திர வாரிசாக அறிமுகமாகி இருந்தாலும், தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்து, சந்தை மதிப்பு கொண்ட நட்சத்திர நடிகராக வலம் வரும் அதர்வா முரளி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தில் அவளுக்கு ஜோடியாக நட்சத்திர இயக்குநரின் வாரிசும், நடிகையுமான அதிதி ஷங்கர் நடிக்கிறார் என படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்திருக்கிறார்கள்.
இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய படத்தில் அதர்வா முரளி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார்.
எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைக்கிறார்.
இந்தத் திரைப்படத்தை யோகி பாபு நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'தர்ம பிரபு' மற்றும் சேரன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'ஆனந்தம் விளையாடும் வீடு' ஆகிய படத்தை தயாரித்த ஸ்ரீவாரி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் பி. ரங்கநாதன் தயாரிக்கிறார்.
தற்போது இயக்குநர் எம். ராஜேஷ் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு பணியில் பங்கு பற்றி வருகிறார்.
இதன் பணிகள் நிறைவடைந்ததும் இப்படத்தின் பணிகளை தொடங்குவார் என்றும், விரைவில் படப்பிடிப்பிற்கான திகதி அறிவிக்கப்படும் என்றும், அதன் போது படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
இதனிடையே அதர்வா முரளியும், அதிதி ஷங்கரும் முதன்முறையாக இணைவதால் இப்படத்திற்கு ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM