டிஜிட்டல் தளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'ஓடேலா ரயில் நிலையம்' படத்தின் இரண்டாம் பாகத்திற்கு 'ஒடேலா 2' என பெயரிடப்பட்டு, நடிகை தமன்னா கதையின் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வட இந்தியாவின் புனித நகரான காசியில் தொடங்கி இருக்கிறது.
இயக்குநர் அசோக் தேஜா இயக்கத்தில் உருவாகும் பன்மொழி திரைப்படமான 'ஓடேலா 2' படத்தில் தமன்னா கதையின் நாயகியாக நடிக்கிறார்.இவருடன் ஹெபாப் பட்டேல், வசிஷ்டா என். சிம்ஹா, யுவா, நாக மகேஷ், வம்சி, சுரேந்தர் ரெட்டி, பூஜா ரெட்டி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
எஸ். சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு அஜனீஷ் லோகநாத் இசையமைக்கிறார்.
இப்படத்தினை மது கிரியேஷன்ஸ் மற்றும் சம்பத் நந்தி டீம் ஒர்க்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் டி. மது தயாரிக்கிறார்.
நடிகை தமன்னா நடிப்பில் டிஜிட்டல் தளங்களில் வெளியான திரைப்படங்கள் பாரிய வெற்றியை பெற்றிருப்பதால் இவர் கதையின் நாயகியாக நடிக்கும் 'ஒடேலா 2' திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
ஒடேலா மல்லெண்ண சுவாமி தனது கிராமத்தை தீய சக்திகளிடமிருந்து எவ்வாறு பாதுகாக்கிறார் என்பதை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த ஃபேண்டஸி மிஸ்டரி திரில்லர் ஜேனரிலான திரைப்படத்தின் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இது தற்போது இந்திய பார்வையாளர்களின் விருப்பத்திற்குரிய ஆன்மீக உணர்வையும் இணைத்து பிரதிபலிப்பதால் இதற்கான எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM